Microsoft வழங்கும் MS Office பதிப்பில் தரப்பட்டுள்ள MS Excel எனும் தொகுப்பானது இன்று ஒவ்வொரு ஆசிரியர், மாணவர்களுக்கும், அலுவலகங்களில் பணி புரியக்கூடியவர்களுக்கும் என ஏராளமான தரப்பினருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.


இந்த MS Excel தொகுப்பை பயன்படுத்தி கணக்கியல் தொடர்பான செயற்பாடுகளை மிக இலகுவாகவும் பிழையின்றியும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.



இன்று MS Excel மென்பொருளை கணனியில் நிறுவினால் மாத்திரம்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலைமை தகர்த்தெறியப்பட்டு MS Excel உட்பட இன்னும் ஏராளமான மென்பொருள்களை இணையத்தின் ஊடாகவே பயன்படுத்திக்கொள்ள முடிகின்ற நிலைமை உருவாகிவிட்டது.

எனவே நீங்களும் இணையத்தினூடாக MS Excel மென்பொருளை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. (உங்களுக்கு Microsoft தளத்தில் ஏற்கனவே கணக்கு ஒன்று இருப்பின் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையெனில் இலவச கணக்கொன்றினை உருவாக்குவதன் மூலம் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.)



microsoft office online


Microsoft Word தொடர்பான பயனுள்ள உதவிக்குறிப்புக்களை பார்க்க இங்கே சுட்டுக.

MS Excel தொடர்பான அறிவைப்பெற பின்வரும் இணையதளங்கள் உதவுகின்றன.

  • Gcflearnfree எனும் இணையத்தளமானது MS Excel தொகுப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை அடிப்படையிலிருந்தே கற்பிக்கின்றது. இந்த தளத்தில் MS Excel தொடர்பாக அறிய வேண்டிய ஒவ்வொரு விடயங்களும் வெவ்வேறேராக வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் கற்பித்தலை மேலும் இலகுவாக்கும் பொருட்டு அவற்றுக்கான பட விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.


Gcflearnfree  online



  • Excel-easy இந்த தளமும் MS Excel தொகுப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கத்தை தருகின்றது. இதன் முகப்புப் பக்கத்தில் அறிமுகம் தொடக்கம்  (Introduction, Basics, Functions, Data Analysis, VBA) இறுதி வரை ஒன்றன்கீழ் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவைகளின் ஒவ்வொரு உபபிரிவுகளுக்கும் படத்துடன் கூடிய விளக்கத்தினை தருகின்றது.

Excel-easy online in tamil


  • Spreadsheets.about இந்த தளத்தின் மூலம் MS Excel தொடர்பான தகவல்கள் மாத்திரம் இன்றி இதற்கு ஈடாக பயன்படுத்தப்படும் Google Spreadsheets தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.



  • Cpearson இந்த தளமானது  MS Excel இல் பயன்படுத்தப்படும் சமன்பாடுகளையும் அவற்றுக்கான விளக்கத்தினையும் பட்டியல் படுத்தித் தருகின்றது.







Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top