HI






Hover Zoom எனும் Google Chrome இணைய உலாவிக்கான நீட்சியானது நீங்கள் பார்க்கக்கூடிய இணையதளங்களில் உள்ள புகைப்படங்களை உருப்பெருக்கி பார்க்க உதவுவதுடன் அவற்றினை Keyboard விசைகளைக் கொண்டும் கட்டுப்படுத்திக்கொள்ள உதவுகின்றது.

Hover Zoom preview

இந்த நீட்சியை உங்கள் Google Chrome இணைய உலாவியில் நிறுவிய பின் Facebook, Twitter, Flickr, Reddit, Amazon, Tumblr என எந்த ஒரு இணையப்பக்கத்திலும் இருக்கக்கூடிய புகைப்படத்துக்கு அருகில் உங்கள் Cursor ஐ நகர்த்துவதன் மூலம் அந்த புகைப்படம் உருப்பெருக்கப்படுவதனை அவதானிக்கலாம்.


மேலும் இந்த நீட்சியை உங்கள் இணைய உலாவியில் நிறுவிய பின்....


  • X விசையை அழுத்துவதன் மூலம் புகைப்படங்கள் உருப்பெருக்கப்படுவதை நிறுத்திக்கொள்ள முடியும்.
  • W விசையை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தினை புதியதொரு சாளரத்தில் திறக்கச்செய்ய முடியும்.
  • T விசையை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தினை புதியதொரு Tab இல் திறக்கச்செய்ய முடியும்.
  • S விசையை அழுத்துவதன் மூலம் அதனை உங்கள் கணனியில் சேமித்துக்கொள்ள முடியும்.
  • Z விசையை அழுத்துவதன் மூலம் அவற்றினை மேலும் பெரிதாக உருப்பெருக்கிக் கொள்ள முடியும்.

இந்த நீட்சிக்கான Option பகுதியின் மூலம்................. 

  • மேற்குறிப்பிட்ட விசைகளை உங்களுக்குத் தேவையான விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
  • குறிப்பிட்ட ஒரு தளத்தில் மட்டும் இருக்ககூடிய புகைப்படங்கள் உருப்பெருக்கப்படாதவாறு அமைத்துக்கொள்ள முடியும். (இதற்கு இதன் Option பகுதியில் Sites எனும் பகுதியில் Disable Hover Zoom for specific sites என்பதற்குக் கீழ் குறிப்பிட்ட தளத்திற்கான URL முகவரியை இட்டு Save செய்ய வேண்டும்.)
  • இணையத்தில் இருக்கக்கூடிய அனைத்து புகைப்படங்களும் உருப்பெருக்கப்படாமல் உங்களுக்குத் தேவையான புகைப்படங்களை மட்டும் உருப்பெருக்கி பார்க்கும் வகையில் Keyboard இன் ஒரு விசைய தெரிவு செய்து கொள்ள முடிவதுடன் அவைகள் எவ்வளவு நேரத்துக்குப் பின் உருப்பெருக்கப்பட வேண்டும் என்பதனையும் அதன் Transparent எந்த அளவு அமைய வேண்டும் என்பதனையும் தெரிவு செய்துகொள்ள முடியும்.


இந்த நீட்சியின் Option பகுதிக்கு செல்ல..........

1.  Address Bar இல் chrome://extensions என தட்டச்சு செய்து Enter அலுத்துக

2. பின் உங்கள் இணைய உலாவியில் நிறுவி இருக்கக்கூடிய நீட்சிகள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும்.

3. அதில் Hover Zoom என்பதற்குக் கீழ் இருக்கக்கூடிய Option என்பதனை சுட்டுக.


நீங்களும் இதனை உங்கள் இணைய உலாவிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Hover Zoom


மேலும் இதனையும் பார்க்க: Wikipedia தளத்தை புத்தம்புதிய தோற்றத்தில் பார்க்க வேண்டுமா? அப்படியானால் இதனை வாசியுங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top