ஆரம்ப காலங்களில் போலல்லாது இன்று எந்த ஒரு இடத்திலும் இடம்பெறக்கூடிய ஒரு நிகழ்வை மிக இலகுவாக படம் பிடித்து அதனை ஏனையவர்களுக்கும் காண்பித்து மகிழ முடிவதுடன் அவற்றினை சேமித்து வைத்து பிறகொரு சந்தர்பத்திலும் பார்த்துக்கொள்ள முடிகின்றது.


 Ashampoo GetBack Photo giveaway 2014


அந்த வகையில் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் திருமண வைபங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுற்றுலாக்கள் மற்றும் இது போன்ற ஏனைய மகிழ்ச்சியான தருணங்களில் நாம் பிடிக்கக்கூடிய புகைப்படங்கள் எமக்கு விலை மதிக்க முடியாதவையாக இருக்கும்.


எனவே இவ்வாறான புகைப்படங்களை பல்வேறு காரணங்களால் நாம் இழக்க வேண்டியும் ஏற்படுவதுண்டு.

அது போன்ற சந்தர்பங்களில் நாம் இழந்த அந்த பெறுமதியான புகைப்படங்களை மீளவும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது Ashampoo GetBack Photo எனும் மென்பொருள்.

  • இந்த மென்பொருள் மூலம் உங்கள் Hard disk, USB flash drive, memory card, USB hard drive, Smartphones போன்ற மற்றும் ஏனைய சாதனங்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை மிக இலகுவாக மீளவும் பெற்றுக்கொள்ள முடியும்.
  • நீங்கள் தவறுதலாக நீக்கிய புகைப்படங்களை மட்டுமல்லாது குறிப்பிட்ட சாதனத்தை நீங்கள் Format செய்திருந்தாலும் கூட அதிலிருந்து நீங்கள் இழந்த புகைப்படங்களை மீள பெற்றுக்கொள்ள இந்த மென்பொருள் துணை புரிகின்றது.
  • மேலும JPG, PNG, BMP, PSD, TIF, GIF, HDP, APCDOC, PCD போன்ற வடிவங்கள் உட்பட இன்னும் ஏராளமான வடிவங்களில் அமைந்த புகைப்படங்களையும் இதன் மூலம் மீட்டுக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் சாதாரண சந்தைப்பெருமதி 20 அமெரிக்க டொலர்களாகும் இருப்பினும் பின்வரும் இணைப்பில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிடுவதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளை இலவசமாக பயன்படுத்துவதற்கான Licence Code ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

இலவச Licence Code ஐ பெற்றுக்கொள்ள ====> Promo Page

தரவிறக்க ===> Download Link

Home Page ===> Click here

குறிப்பு: இந்த மென்பொருளை நிறுவும் போது Advanced Driver Updater எனும் மென்பொருளும் நிறுவப்படும் இதனை தவிர்க்க விரும்பினால் நிறுவுவதற்கான சாளரத்தில் No, thank you என்பதனை தெரிவு செய்க.

ashampoo getback intallation window


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top