அலாரம் வைத்து அதிகாலையில் துயில் எழும் பழக்கம் உங்களுக்கும் உண்டா...... ?


ஆண்ட்ராய்டு அலாரம் செயலி

சில சந்தர்பங்களில் எவ்வளவுதான் அலாரம் ஒலித்தாலும் அதனை மீண்டும் மீண்டும் நிறுத்தி வைத்திவிட்டு தூக்கமே சுகம் என தூங்கும் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு உண்டு ஏன் என்னையும் சேர்த்து. (பிறகு எழுந்து நான் அப்பொழுதே எழுந்திருக்க வேண்டுமே என எண்ணுவதும் உண்டு)
இருப்பினும் Spinme எனும் Smart சாதனங்களுக்கான செயலியானது உங்களை வலுக்கட்டாயமாக எழுப்பியே விடுகின்றது. அது எப்படி என்கிறீர்களா?

  • இந்த செயலி மூலம் அலாரம் ஒலிக்கும்போது முதலில் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்.
  • பின் குறிப்பிட்ட செயலியில் உங்கள் விரலை வைப்பதற்கு இரு கைரேகை அடையாளங்கள் தரப்பட்டிருக்கும்.
  • பிறகு அதனை உங்கள் விரல்களால் தொடர்ச்சியாக அழுத்தியவாறு உங்களை நீங்களே இருமுறை சுற்ற வேண்டும்.
  • இல்லையெனில் அலாரம் நிறுத்தப்பட மாட்டாது.
  • அவ்வாறு செய்யாமல் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தின் இயக்கத்தை நிறுத்தவும் (Power Off) முடியாது.

இது எப்படி............? நிறுத்திவிட்டு மீண்டும் தூங்க நினைத்தால் தூக்கம் பறந்து போயிருக்கும்.

இதனை கீழுள்ள சாளரத்தின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.
பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் ஐ.ஓ.எஸ் சாதனங்களுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top