ஒரு சிறிய தலைவலி ஏற்பட்டாலும் அதற்கு மருந்துகளை நாடுபவர்கள் ஏராளம். பொதுவாக நமது உடலில் ஏற்படக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு எமது உடலே நிவாரணத்தை வழங்கினாலும் வழமைக்கு மாறாகவோ அல்லது அடிக்கடி ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு நாம் கட்டாயம் வைத்தியரை நாடியே ஆகவேண்டும்.எது எப்படியோ இன்று மருந்து இல்லா நோயுமில்லை நோய் இல்லா மருந்தும் இல்லை என வளர்ந்துவிட்ட மருத்துவத்துறையானது ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறான மருந்து வகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
இதனையும் பார்க்க: இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? என்பதனை நிகழ் நேர தகவலாக தரக்கூடிய அருமையான ஒரு தளம். 


பெரும்பாலான மருந்து வகைகள் ஒரு நோய்க்கு உடனடியாக சுகத்தை தந்தாலும் அவைகள் எதிர்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதிலும் தவறுவதில்லை.


 • எனவே குறிப்பிட்ட ஒரு மருந்தானது எந்த வகையான நோய்க்கு பயன்படுத்தப்பட வேண்டும்? 
 • அது உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றது?
 • அதன் தன்மை எவ்வாறு இருக்கும்?(திண்மம், திரவம், வாயு, வேறு...)
 • அதன் பிரதான செயல்பாடு என்ன?
 • அதன் பயன்படுத்தியவர்களின் கருத்துக்கள் என்ன?
 • அது அவர்களுக்கு பயனளித்ததா?
 • இல்லையெனில் அது அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியதா?
 • அவ்வாறு பயனளித்தது எனின் அதில் ஆண்களில் வீதம் எத்தனை? பெண்களின் வீதம் எத்தனை?
 • இல்லை பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தியது எனின் அது 17 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு எவ்வாறான நோயினை ஏற்படுத்தியது? அவைகள் ஒவ்வொன்றினதும் வீதம் என்ன?
 • 18 தொடக்கம் 34 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எவ்வாறான பக்கவிளைவிகளை ஏற்படுத்தியது? அதில் ஒவ்வொன்றினதும் வீதம் எத்தனை?
 • இது போல் 34 தொடக்கம் 54 வரையான தரப்பினருக்கு எவ்வாறான எவ்வாறான பக்கவிளைவிகளை ஏற்படுத்தியது? அதில் ஒவ்வொன்றினதும் வீதம் எத்தனை?
 • 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எவ்வாறான எவ்வாறான பக்கவிளைவிகளை ஏற்படுத்தியது? அதில் ஒவ்வொன்றினதும் வீதம் எத்தனை?
 • அந்த மருந்து தொடர்பான எச்சரிக்கைகள்?
 • அதனை சிறுவர்களுக்கு பயன்படுத்த முடியுமா?
 • அதனை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பயன்படுத்த முடியுமா? 
 • அதன் விலை என்ன?என அத்தனை தகவல்களையும் விலாவாரியாக அறிந்துகொள்ள உதவுகின்றது iodine எனும் இணையதளம்.


இவைகள் தவிர நீங்களும் குறிப்பிட்ட ஒரு மருந்தை பயன்படுத்தி அது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ள முடியும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top