விண்டோஸ் டாஸ்க்பாரின் வலது கீழ் மூலையில் திகதி, மற்றும் நேரத்தை பார்த்துக் கொள்வதற்கான வசதி தரப்பட்டுள்ளதல்லவா?

இருந்தாலும் அதன் மூலம் நேரடியாக கிழமை நாட்களை பார்த்துக்கொள்ள முடிவதில்லை. இருப்பினும் இதன் அமைப்பில் சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிழமை நாட்களையும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தோன்றச் செய்யலாம்.

விண்டோஸ் டாஸ்க்பாரில் கிழமை நாட்களை தோன்றச் செய்வது எப்படி?


1. Control Panel சென்று Region and language என்பதனை சுட்டுக.

2. பின் தோன்றும் சாளரத்தில் Formats எனும் Tab இற்குக் கீழ் இருக்கும் Additional Settings என்பதை சுட்டுக.


விண்டோஸ் நேரம்


3. இனி தோன்றும் புதிய சாளரத்தில் Date எனும் Tab ஐ சுட்டுக.

தமிழ் விண்டோஸ்


4. பின் அதில் Short Date என்பதில் M/d/yyyy, என்றவாறு இருப்பதனை அவதானிக்கலாம். இனி அதில் dddd என்பதனை சேர்த்து விடுங்கள்.

இங்கு dddd என்பதனை சேர்ப்பதன் மூலம் கிழமை நாளை முழுமையாக தோன்றச்செய்ய முடிவதுடன் ddd என்பதை சேர்ப்பதன் மூலம் கிழமை நாளின் முதல் மூன்று எழுத்துக்களை மாத்திரம் தோன்றச் செய்யவும் முடியும்.

உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை எனின் dddd என்பதனை சேர்ப்பதன் மூலம் Friday எனவும் ddd என்பதனை சேர்ப்பதன் மூலம் Fri எனவும் தோன்றச் செய்யலாம்.

M/d/yyyy, ddd = Friday

M/d/yyyy, dddd = Friஅவ்வளவு தான் இனி திகதி, நேரம் என்பவற்றுடன் கிழமை நாட்களையும் Taskbar மூலம் அறிந்து கொள்ளலாம்.


Love to hear what you think!

7 comments:

 1. நன்றி !! இதுபோல பல பயனுள்ள தகவல்கள் எதிர்பார்க்கிறோம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக .......... நாங்கள் வழங்க தயாராக உள்ளோம் பெரியவரே..........

   தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

   நீக்கு

 
Top