நாம் கணனியை இயக்கிவிட்டால் அதன் பிறகு எத்தனையோ காரியங்களை அதன் மூலமாக செய்து விடுவோம் அல்லவா?பல ஆயிரக்கணக்கான தடவைகள் மவுஸை பயன்படுத்தி சுட்டியிருப்போம், அதே போல் பல ஆயிரம் தடவைகள் கீபோர்ட்டின் விசைகளை அழுத்தி இருப்போம், இன்னும் எத்தனையோ மென்பொருள்களை திறந்து பயன்படுத்தி இருப்போம், இது போல் ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும்.whatpuls interface


இது போன்ற செயற்பாடுகளை புள்ளிவிவர அடிப்படையில் அறிய முடிந்தால் சுவாரஷ்யமாக இருக்குமல்லவா?

ஆம், அவ்வாறு நாம் கணனியில் செய்யும் ஒவ்வொரு செயற்பாட்டினையும் பதிந்து புள்ளிவிபர அடிப்படையில் மீட்டிப்பார்க்க உதவுகின்றது WhatPulse எனும் மென்பொருள்.இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் நீங்கள் கணனியில் மேற்கொள்ளும் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.


மென்பொருள்கள் தொடர்பான தகவல்கள்.

 • உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் இயங்குதளம் என்ன?
 • தற்பொழுது இனையாத்துடன் தொடர்புபட்டிருக்கும் மென்பொருள்கள் எது?
 • உங்கள் கணனியில் ஒவ்வொரு மென்பொருளும் தொடர்ச்சியாக எவ்வளவு நேரம் இயங்கி உள்ளது?
 • நீங்கள் கணனியில் அதிகம் பயன்படுத்தி இருக்கும் மென்பொருள் எது?


Keyboard தொடர்பான தகவல்கள்.

 • கீபோர்ட்டில் உள்ள விசைகளை மொத்தம் எத்தனை தடவைகள் அழுத்தி உள்ளீர்கள்.
 • இன்று எத்தனை தடவைகள்  அழுத்தி உள்ளீர்கள்.
 • நேற்று எத்தனை தடவை  அழுத்தி உள்ளீர்கள்.
whatpuls keyboard heatmap

 • மொத்தம் எத்தனை தடவை  அழுத்தி உள்ளீர்கள். (இந்த மென்பொருள் நிறுவிய நாள் தொடக்கம்)
 • ஒவ்வொரு மென்பொருளிலும் எத்தனை தடவைகள் தட்டச்சு செய்துள்ளீர்கள்.
 • எந்த மென்பொருளில் அதிகம் தட்டச்சு செய்துள்ளீர்கள். (இன்று, நேற்று, மொத்தம்)
 • நீங்கள் கணனியை பயன்படுத்திய நாட்களில் Keyboard இன் விசைகளை அதிகம் பயன்படுத்திய நாள் எது? அவற்றின் எண்ணிக்கை யாது?


Mouse தொடர்பான தகவல்கள்.

 • Mouse ஐ பயன்படுத்தி மொத்தம் எத்தனை தடவைகள் சுட்டியுள்ளீர்கள்.
 • இன்று எத்தனை தடவைகள்  சுட்டியுள்ளீர்கள்.
 • நேற்று எத்தனை தடவை  சுட்டியுள்ளீர்கள்.
 • மொத்தம் எத்தனை தடவை  சுட்டியுள்ளீர்கள். (இந்த மென்பொருள் நிறுவிய நாள் தொடக்கம்)
 • ஒவ்வொரு மென்பொருளிலும் எத்தனை தடவை சுட்டியுள்ளீர்கள்.
 • எந்த மென்பொருளில் அதிகம் சுட்டியுள்ளீர்கள். (இன்று, நேற்று, மொத்தம்)
whatpuls mouse heatmap

 • திரையில் எந்த இடத்தில் அதிகம் சுட்டியுள்ளீர்கள் என்பதற்கான விளக்கப் படம். (இன்று, நேற்று, மொத்தம்)
 • நீங்கள் கணனியை பயன்படுத்திய நாட்களில் Mouse மூலம் அதிகம் சுட்டிய திகதி, நாள் எது? சுட்டிய எண்ணிக்கை எத்தனை?இணையம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள். • உங்கள் வலையமைப்பு முகவரி என்ன?
 • இணையத்தில் இருந்து எந்த அளவு தரவுகளை தரவிறக்கி உள்ளீர்கள். (இன்று, நேற்று, மொத்தம்)
 • இணையத்துக்கு எந்த அளவு தரவுகளை தரவேற்றி உள்ளீர்கள். (இன்று, நேற்று, மொத்தம்)
 • நீங்கள் ஒரு நாளிற்காக தரவிறக்கி இருக்கும் சராசரி தரவுகள் எந்த அளவு?
 • உங்கள் கணனி தொடர்ச்சியாக இயங்கியிருக்கும் நேரம் எவ்வளவு?
 • எந்த எந்த நாட்களில் கணனியை Reboot செய்துள்ளீர்கள்.whatpuls trackமேலும் இதனையும் பார்க்க: நீங்கள் பிறந்தது தொடக்கம் இந்த வினாடி வரை இடம்பெற்றிருக்கக் கூடிய பல சுவாரஷ்யமான தகவல்களை அறிய உதவும் ஒரு இணையதளம்.


WhatPulse எனும் இந்த மென்பொருளை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட தகவல்கள் மாத்திரம் அல்லாது இன்னும் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிவதுடன் இந்த மென்பொருள் மூலம் சேகரிக்கப்படும் இது போன்ற தரவுகளை WhatPulse இணையத்தில் சேமித்துக் கொள்ளவும் அவற்றினை இணையத்தை பயன்படுத்தும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

இந்த மென்பொருள் உங்கள் மவுஸ், கீபோர்ட்டின் நடவடிக்கைகளை பதிவு செய்கின்றதே இதனால் எமக்கு ஏதும் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதா? என எண்ணுகிறீர்களா?

இந்த மென்பொருளானது உங்கள் மவுஸ், கீபோர்ட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்குமான எண்ணிக்கையை மாத்திரமே கணிப்பிடுகின்றது. மாறாக நீங்கள் எந்த எந்த விசைகளை அலுத்துகின்றீர்கள் என்பதை இது கண்காணிப்பதில்லை.

எனவே இதனை பயன்படுத்துபவர்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

Source: Wikipedia


இதனை தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download WhatPulse

மேலதிக குறிப்புகள்:

 • இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவிய பின் Username, Password என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன் உங்கள் WhatPulse கணக்கிற்கான கடவுச்சொல் ஒன்றினையும் உள்ளிட்டு கணக்கொன்றினை உருவாக்கிக் கொள்க.
 • பின் நீங்கள் கணணியை பயன்படுத்திய ஒரு சில மணித்தியாலங்களின் பின்னோ அல்லது ஒரு சில நாட்களிலோ அந்த மென்பொருளை திறந்து பாருங்கள்.


மேற்குறிப்பிட்ட உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும்.

அவற்றினை இணையத்தில் உங்களுக்குரிய WhatPulse கணக்கில் சேமிக்க விரும்பினால் குறிப்பிட்ட மென்பொருளின் பிரதான் சாளரத்தில் உள்ள Pulse என்பதனை அலுத்துக.


இதனையும் பார்க்க: இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? என்பதனை நிகழ் நேர தகவலாக தரக்கூடிய அருமையான ஒரு தளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top