எமது எண்ணங்கள் கருத்துக்களை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்று Facebook தளம் மிகச்சிறந்த ஒரு களமாக உருவெடுத்துள்ளது.


unfriend notify


அந்தவகையில் முகநூல் தளத்தை பயன்படுத்தும் நாம் எமக்குத் தெரிந்த நண்பர்களை எமது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ள அவர்களுக்கான "நண்பர் கோரிக்கையை" அனுப்புவோம் அல்லவா?


அதே போன்று நாம் யாருக்கெல்லாம் அறிமுகமாக இருக்கின்றோமோ அவர்களால் எமக்கும் "நண்பர் கோரிக்கை" விடுக்கப்படும் அல்லவா?

மேற்கூறிய சந்தர்பங்களிலும் குறிப்பிட்ட நண்பர் கோரிக்கையை ஒருவர் ஏற்றுக்கொண்ட பின்னும் அது தொடர்பான அறிவித்தல் எமக்கு Notification ஆக காண்பிக்கப்படும்.

இருப்பினும் எம்மை நண்பர் பட்டியலில் இருந்து எமது நண்பர் ஒருவர் எம்மை நீக்கி விட்டால் அதனை முகநூல் தளம் எமக்கு அறியத்தரமாட்டாது. (2014-August)

இருப்பினும் Google Chrome இணைய உலாவிக்கான ஒரு நீட்சியை நிறுவுவதன் மூலம் இவ்வாறு நம்மை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட நீட்சியை நிறுவிய பின் உங்கள் நண்பர் பட்டியலில் Lost Friends எனும் புதியதொரு பகுதி தோன்றியிருப்பதனை அவதானிப்பீர்கள்.


facebook Lost Friends extension tamil


பின் அதனை சுட்டுவதன் மூலம் உங்களை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிய நண்பர் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்த நீட்சியை உங்களது Chrome இணைய உலாவிக்கும் நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.தொழில்நுட்ப சொற்கள்.

● நண்பர் கோரிக்கை =====> Friend Request 
● இணைய உலாவி =====> Internet Browser
● முகநூல் =====> Facebook
● நீட்சி =====> Extension 
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top