YouTube தளத்தில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்களை Gif Image வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள விரும்புகின்றீர்களா?

youTube to gif

அப்படியாயின் எவ்வித மென்பொருள்களினது துணையும் இன்றி வீடியோ கோப்புக்களை Gif வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள உதவுகின்றது gifyoutube எனும் இணையதளம்.




இந்த தளம் மூலம் YouTube வீடியோ கோப்புக்களை நீங்களும் Gif வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள விரும்பினால் கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


1. gifyoutube எனும் இந்த தளத்திற்குச் சென்று நீங்கள் Gif வடிவத்தில் பெற வேண்டிய வீடியோ கோப்பின் URL முகவரியை தட்டச்சு செய்க. அல்லது குறிப்பிட்ட YouTube வீடியோ கோப்பிற்கான URL முகவரியில் www. என்பதற்கு அடுத்ததாக gif எனும் சொல்லினை இட்டு அந்த இணைப்பில் செல்க.


  • உதாரணத்திற்கு: https://www.youtube.com/watch?v=1YBheuHma8I எனும் முகவாரியுடன் gif என்பதனை சேர்த்தால் அது பின்வருமாறு அமையும்.
  • gif என்ற சொல்லுடன் ===> https://www.gifyoutube.com/watch?v=1YBheuHma8I




2. பின் தோன்றும் சாளரத்தில் அந்த வீடியோ கோப்பு இயங்கத்துவங்கும்.

3. இனி அந்த வீடியோ கோப்பின் எந்த இடத்தில் இருந்து நீங்கள் Gif Image ஐ உருவாக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தில் Pause என்பதனை அலுத்துக.


online gif editor


4. பிறகு குறிப்பிட்ட Gif Image எவ்வளவு நேரம் இயங்க வேண்டும் என்பதனை Gif Length என்பதன் மூலம் தெரிவு செய்துகொள்க. (இதில் ஆகக் குறைந்தது 1 தொடக்கம் ஆகக் கூடியது 10 செக்கன் வரை தரப்பட்டிருக்கும்.)

5. பின் Create Gif என்பதனை அழுத்துவதன் மூலம் உங்கள் Gif Image உருவாக்கப்படும்.

அதனை நீங்கள் உங்கள் கணனியில் சேமிக்க விரும்பினால் Right Click செய்து Save Image As என்பதன் மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

edit and share gif


பிறகு அதனை தரவேற்றுவதன் மூலமோ அல்லது பகிர்ந்து கொள்வதற்காக தரப்பட்ட URL முகவரி மூலமோ சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழலாம்.


மேலும் இதனையும் பார்க்க: YouTube தளத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத அருமையான சில வசதிகள். (பார்க்கத் தவறாதீர்கள்) Tips And Tricks


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top