கணனியை பயன்பாடுத்தி அன்றாடம் ஏராளமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாம் எத்தனையோ கோப்புறைகளையும், மென்பொருள்களையும் திறந்து மூடுவோம் அல்லவா?

undo close in windows


அவ்வாறன சந்தர்பங்களில் எமது கணனியில் நாம் ஏற்கனவே திறந்திருந்த ஒரு கோப்புறையினை, அல்லது மென்பொருளை தவறுதலாகவோ கவனம் இன்மையினாலோ மூடிவிட்டால் Keyboard Shortcut ஐ பயன்படுத்தி அதனை மீண்டும் திறந்துகொள்ள உதவுகின்றது Undo Close எனும் இலவச மென்பொருள்.மிகவும் சிறிய அளவினையே கொண்டுள்ள இதனை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. தரவிறக்கப்பட்ட Zip கோப்புறையை Extract செய்த பின் UndoClose என்பதனை Double Click செய்வதன் மூலம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை Double Click செய்த பின் இது உங்கள் Task Bar இல் வந்தமர்ந்து கொள்ளும் பின் நீங்கள் திறந்து மூடும் ஒவ்வொரு கோப்புறைகள் மற்றும் மென்பொருள்கள் தொடர்பான தகவல்களை இது சேமித்துக்கொள்ளும். 

இவ்வாறு திறந்து மூடப்பட்ட கோப்புறைகளின் பட்டியலையும் மென்பொருள்களின் பட்டியலையும் இந்த மென்பொருளின் பிரதான சாளரத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். (படம் இல: 2,3)


undoclose free software


பின் Control + Shift + F விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துகையில் நீங்கள் இறுதியாக மூடிய கோப்புறையினையும் மீண்டும் அதே விசைகளை அழுத்துகையில் இறுதியாக மூடிய கோப்புறைக்கு முன் மூடிய கோப்புறைகளையும் திறந்துகொள்ளலாம்.

அதே போல் Control + Shift + A விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் இறுதியாக மூடிய மென்பொருளையும் மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம் அதற்கு முன் மூடப்பட்ட ஒவ்வொரு மென்பொருளாகவும்  திறந்து கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட விசைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் மேலும் உங்கள் கணனி துவங்கும் போதே இந்த மென்பொருளும் துவங்க வேண்டும் எனின் குறிப்பிட்ட மென்பொருளில் தரப்பட்டுள்ள Run on system startup என்பதில் Tick அடையாளத்தினை இடுக. (படம் இல: 01)


இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top