இன்று Facebook தளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு Facebook தளமானது பிரபல்யம் அடைந்துள்ளது. அத்துடன் மிகவேகமாக வளர்ந்து வரும் இந்த சமூக வலைதலமானது காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும் வசதிகளிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். 

facebook Graph search tamil


அந்த வகையில் Facebook தளத்தில் Graph Search எனும் வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்தும் விதத்தினை அதிகமானோர் அறிந்ததில்லை.


Graph Search  வசதியை பயன்படுத்தி முகநூல் தளத்தில் உள்ள ஏராளமான தகவல்களை மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். 


எனவே கீழே தரப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களில் அமைந்த வசனங்களை Graph Search பகுதியில் தட்டச்சு செய்வதன் மூலம் பின்வரும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Facebook தளத்தில் உங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துகொள்ள உதவும் Graph Search வசனங்கள்.

 • My favorite pages - நீங்கள் Like செய்திருக்கக்கூடிய முகநூல் பக்கங்கள் பட்டியல் படுத்தப்படும்.
 • My favorite music - நீங்கள் Like செய்திருக்கக் கூடிய இசையினை அடிப்படையாகக் கொண்ட முகநூல் பக்கங்கள் பட்டியல்படுத்தப்படும்.
 • Books I like - நீங்கள் Like செய்திருக்கக் கூடிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட முகநூல் பக்கங்கள் பட்டியல்படுத்தப்படும்.
 • Photos I have liked - முகநூல் தளத்தில் நீங்கள் Like செய்திருக்கக்கூடிய அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.
 • Photos that I have liked by [Page Name] - [Page Name] எனும் இடத்தில் குறிப்பிட்ட ஒரு முகநூல் பக்கத்தின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அந்த பக்கத்தில் நீங்கள் Like செய்துள்ள அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.
Facebook Graph search

 • Photos I have like that are recent - மிக அண்மையில் Like செய்த அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.
 • Places visited by me - நீங்கள் பயணித்துள்ள இடங்கள் பட்டியல் படுத்தப்படும்.
 • Games I like - நீங்கள் விரும்பக்கூடிய விளையாட்டுக்கள் பட்டியல்படுத்தப்படும்.

மேலும் இதனையும் பார்க்க:  Facebook தந்திரோபாயங்கள் (ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது)


Facebook தளத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்களினது புகைப்படங்கள், மற்றும் ஏனைய தகவல்களை பெற உதவும் Graph Search வசனங்கள்.

 • Photos of my friends - உங்கள் நண்பர்கள் பகிர்ந்திருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும்.
 • Photos of my friends of friends taken in [Place] - [Place] எனும் இடத்தில் ஒரு இடத்தை தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் நண்பர்களின் நண்பர்களால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும்.
உதாரணத்திற்கு சென்னையில் வைத்து உங்கள் நண்பர்களின் நண்பர்களால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை அறிய Photos of my friends of friends taken in chennai என தட்டச்சு செய்ய வேண்டும்.
 • Photos of people named [Name] -  இங்கு [Name] எனும் இடத்தில் ஒரு பெயரினை தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பெயரில் அமைந்த அனைத்து நபர்களினது புகைப்படங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
 • Photos of [Name] - [Name] எனும் இடத்தில் நபர் ஒருவரின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அவரது அனைத்து புகைப்படங்களையும் பார்க்கலாம் (இவர் உங்கள் நண்பராக அல்லது நண்பரின் நண்பராக இருத்தல் வேண்டும்.)
 • Photos uploaded by [Name] - Name] எனும் இடத்தில் நபர் ஒருவரின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அவரால் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை அறிந்துகொள்ளலாம்.
 • Photos of [Name] in after [Year] - [Name] எனும் இடத்தில் ஒரு நபரின் பெயரையும் [Year] எனும் இடத்தில் ஒரு ஆண்டையும் தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுக்குப் பின் குறிப்பிட்ட நபருக்குரிய அனைத்து புகைப்படங்களும் பட்டியல்படுத்தப்படும்.
 • Photos of [Name] in before [Year] - [Name] எனும் இடத்தில் ஒரு நபரின் பெயரையும் [Year] எனும் இடத்தில் ஒரு ஆண்டையும் தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுக்குப் முன் குறிப்பிட்ட நபருக்குரிய அனைத்து புகைப்படங்களும் பட்டியல்படுத்தப்படும்.
 • Photos commented on by [Name] - Name] எனும் இடத்தில் ஒரு நபரின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அவர் முகநூலில் கருத்து தெரிவித்துள்ள அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.
 • Photos liked by [Name] - [Name] எனும் இடத்தில் நபர் ஒருவரின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அவர் முகநூலில் Like செய்திருக்கக்கூடிய அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.
 • Photos of [Person A] liked by [Person B] - [Person A] எனும் இடத்தில் ஒருவரின் பெயரையும் [Person B] எனும் இடத்தில் இன்னும் ஒருவரது பெயரையும் தட்டச்சு செய்வதன் மூலம் B என்பவரால் Like செய்யப்பட்டுள்ள A நபரினது அனைத்து புகைப்படங்களும் பட்டியல்படுத்தப்படும்.
 • Photos of [Person A] AND [Person B] - Person A] எனும் இடத்தில் ஒருவரின் பெயரையும் [Person B] எனும் இடத்தில் இன்னும் ஒருவரது பெயரையும் தட்டச்சு செய்வதன் மூலம் நபர் A மற்றும் நபர் B இற்குரிய அனைத்து புகைப்படங்களும் பட்டியல் படுத்தப்படும்.

உங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பான தகவல்களை அறிய உதவும் Graph Search வசனங்கள்.


 • Restaurants nearby liked by my friends - உங்கள் நண்பர்களால் விரும்பப்பட்ட உணவகங்கள் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய உணவகங்கள்.
 • Hotels nearby liked by my friends of friends - உங்கள் நண்பர்களின் நண்பர்களால் விரும்பப்பட்ட உங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள்.
 • Friends who live in [Place] - [Place] என்பதில் ஒரு இடத்தினை இட்டு தேடுவதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் வாழக்கூடிய உங்கள் நண்பர்களின் பட்டியலைப் பெறலாம்.
 • Recent photos taken in [Place] -  [Place] என்பதில் ஒரு இடத்தினை இட்டு தேடுவதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் மிக அண்மையில் பிடிக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் பார்க்கலாம்.


உங்களை பின்பற்றுபவர்கள் தொடர்பான தகவல்களை அறிய உதவும் Graph Search வசனங்கள்.


 • People who follow me - முகநூலில் எம்மை தொடர்பவர்கள் யார் என்பதை அறிய முடியும்.
 • People who follow me and like [Page Name] - [Page Name] எனும் இடத்தில் முகநூல் பக்கம் ஒன்றின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட முகநூல் பக்கத்தை விரும்பி இருக்கக்கூடியவர்களுள் உங்களை பின் தொடர்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
 • People who follow me and live in [City] - [City] எனும் இடத்தில் ஒரு நகரத்தின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட நகரத்தில் வாழக்கூடியவர்களுள் உங்களை பின் தொடர்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
 • People who follow me and work at [Company] -  [Company] எனும் இடத்தில் ஒரு கம்பனியின் அல்லது நிறுவனத்தின் பெயரை தட்டச்சு செய்வதன் மூலம் அந்த கம்பனியில் பணி புரியக்கூடியவர்களுள் உங்களை யாரெல்லாம் பின்தொடர்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
 • People who follow me and were born in [Year] -  [Year] எனும் எனும் இடத்தில் ஏதாவது ஒரு ஆண்டை தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்களுள் யாரெல்லாம் பின்தொடர்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
 • Friends of friends who follow me - உங்கள் நண்பருடைய நண்பர்களுள் யாரெல்லாம் உங்களை பின் தொடர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.


இவைகள் தவிர இன்னும் ஏராளமான தகவல்களை Facebook Graph Search வசதியினை பயன்படுத்தி அறிந்துகொள்ள முடியும். நேரம் அனுமதி தந்தால் அவற்றினை நாம் எமது Facebook, Google Plus, Twitter போன்ற சமூக வலைதலங்களுக்கான பக்கங்கள் மூலம் பகிர்ந்துகொள்கின்றோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top