உலகின் மிகச்சிறந்த இணையதளங்களுள் Wikipedia இணையதளமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட 285 மொழிகளில் 31,000,000 இற்கும் அதிகமான ஆக்கங்களை கொண்டுள்ள இந்த பாரிய இணையத்தளமானது ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள சேவையை வழங்கி வருகின்றது.

தமிழ் Wikiwand


அந்த வகையில் Wikipedia இணையதளம் மூலம் அடிக்கடி பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் நாம் எப்போதும் அதன் வடிவமைப்பை ஒரே விதத்தில் தான் பார்த்து வருகின்றோம்.

இருப்பினும் Wikiwand எனும் இணைய உலாவிக்கான நீட்சியை நிறுவிக்கொள்வதன் மூலம் Wikipedia இணையதளத்தை புத்தம் புதிய தோற்றத்தில் பார்க்க முடிவதுடன் இன்னும் பல வசதிகளையும் இலகுவாக அடைந்து கொள்ள முடியும்.Wikiwand நீட்சியை நிறுவ முன் Wikipedia இணையதளத்தின் தோற்றம்.


new interface for wikipedia

இந்த நீட்சியை உங்கள் இணைய உலாவியில் நிறுவிய பின் Wikipedia இணையதளத்துக்கான எந்த ஒரு இணைப்பில் நீங்கள் சென்றாலும் அது தானாகவே புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும்.


Wikiwand நீட்சியை நிறுவிய பின் Wikipedia இணையதளத்தின் தோற்றம்.


modern interface for wiki


  • இந்த புதிய தோற்றமானது பார்பதற்கு இதமானது மட்டுமின்றி மிக வேகமாக தகவல்களை தேடிப்பெறவும் அதனை நண்பர்களுடன் பகிந்து கொள்ளவும் உதவுகின்றது.
  • மேலும் இதில் தரப்படும் Tool bar மூலம் நீங்கள் பார்க்கக்கூடிய ஒரு தகவல் இன்னும் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்பதை மிக இலகுவில் அறிந்துகொள்ள கொள்ள முடிவதுடன் அவற்றினை ஒரு மொழியில் இருந்து இன்னுமொரு மொழிக்கு மிக இலகுவாக மாற்றிக்கொள்ளவும் முடியும். 
  • அத்துடன் குறிப்பிட்ட ஆக்கத்தில் தரப்பட்டுள்ள உள்ளக இணைப்புக்களுக்கான சிறிய விளக்கத்தினை அதே ஆக்கத்தில் தோன்றும் Popup Box மூலம் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடிவதுடன் அந்த ஆக்கத்தில் இருக்கக்கூடிய ஏனைய தகவல்களை ஒரே பார்வையில் பார்த்துக் கொள்ளக்கூடிய வகையில் அவற்றின் உப தலைப்புக்கள் இடது பக்கம் பட்டியல்படுத்தப் படுகின்றது.
  • இவைகள் தவிர குறிப்பிட்ட ஆக்கத்தினை Wikipedia இன் வழமையான தோற்றத்திலே பார்பதற்கும் இதில் வசதி தரப்பட்டுள்ளதுடன் உங்களுக்குத் தேவையான ஆக்கங்களை PDF வடிவத்தில் தவிறக்கிக் கொள்ளவும் Print செய்துகொள்ளவும் முடிகின்றது.இன்னும் பல வசதிகளை தரும் இந்த பயனுள்ள நீட்சியை உங்கள் இணைய உலாவியிலும் நிறுவி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top