நீங்கள் தொடர்ச்சியாக கணனியிலேயே அமர்ந்து இருப்பதால் மீண்டும் செய்ய வேண்டிய ஒரு சில விடயங்களை மறந்து விடுகின்றீகளா?

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Kana Reminder எனும் சிறியதொரு இலவச மென்பொருள்.


reminder software download tamil

இந்த மென்பொருளை பயன்படுத்தி மீண்டும் ஒரு நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடிவது மாத்திரமின்றி இன்னும் பல வசதிகளையும் அனுபவிக்கலாம்.

  • இந்த மென்பொருளின் Reminder List எனும் பகுதியில் Add என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்டதொரு நேரத்தில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு இடையில்  நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய எத்தனை விடயங்களையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.  • ஞாபகப்படுத்த வேண்டிய நேரத்தில் குறிப்பிட்ட மென்பொருளில் தரப்பட்ட ஒரு ஒலியினையோ அல்லது நீங்கள் விரும்பும் உங்கள் கணனியில் இருக்கக்கூடிய ஒரு ஒலியினையோ எழுப்பிக்கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.  • மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்கள் கணனியில் இருக்கக் கூடிய ஒரு மென்பொருள் தானாகவே இயங்கும் வகையிலும் அமைத்துக் கொள்ள முடியும்.  • இவைகள் தவிர நீங்கள் ஞாபப்படுத்திக் கொள்வதற்காக எழுதக் கூடிய குறிப்புக்களை ஏனையவர்கள் பார்க்காத வண்ணம் நீங்கள் மாத்திரம் பார்துக்கொள்வதற்கென கடவுச்சொல் ஒன்றினை இட்டுக்கொள்ளவும் முடியும்.


மேலும் இதனையும் பார்க்க: ஏனையவர்களால் ஊகிக்க முடியாத மிகவும் வலிமையான கடவுச் சொற்களை அமைத்துக் கொள்வது எவ்வாறு?  • இவை அனைத்திற்கும் மேலாக குறிப்பிட்டதொரு நேர முடிவில் உங்கள் கணனி தானாகவே Logout, Restart, அல்லது Shutdown செய்து கொள்ளும்படி அமைத்துக்கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.இன்னும் பல வசதிகளை தரும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Kana Reminder (File size: 544.9 KB)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top