குறிப்பிட்ட ஒரு Video அல்லது Audio கோப்பினை நாம் வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துகையில் அவற்றினை நாம் அந்தந்த சாதனங்களில் இயங்குவதற்கு ஏற்ற வடிவத்திற்கு மாற்றியே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவைகள் இயங்காது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

IceCream Media Converter Free software


அந்த வகையில் வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் Video கோப்புக்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றித்தர ஏராளமான மென்பொருள்கள் உதவுகின்றது.

இருப்பினும் அவற்றுள் இலவச மென்பொருள்கள் மிகவும் அரிது என்பதுடன் ஏராளமான இலவச மென்பொருள்கள் வரையறையுடன் கூடிய பயனையே தருகின்றது. உதாரணமாக சில இலவச மென்பொருள்கள் மூலம் 1GB இற்கு கூடிய அளவுள்ள கோப்புகளை Convert செய்ய முடியாது அல்லது குறிப்பிட்ட ஒரு நேர அளவைக் கொண்ட வீடியோ கோப்புக்களை மாத்திரமே Convert செய்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற வரையறைகள் இன்றி வீடியோ கோப்புக்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள என ஒரு சில மென்பொருள்கள் உதவுகின்றன அவ்வாறு பயனுள்ள மென்பொருள்களுள் Freemake Video Converter எனும் மென்பொருளை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தோம்.


அதே போன்ற கட்டுப்பாடுகள் அற்ற சிறந்த வசதிகளை தருகின்றது IceCream Media Converter எனும் மென்பொருள். 

இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் கணணியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் இதனை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.


இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள எளிமையான நான்கு படிமுறைகளை பின் பற்றுவதன் மூலம் எந்த ஒரு வீடியோ கோப்பினையும் ஒருவடிவத்தில் இருந்து ஒன்நோமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.


IceCream Media Converter in tamil


  • இதில் தரப்பட்டுள்ள படிமுறைகளில் முதலாவதாக,  நீங்கள் எந்த வீடியோ கோப்பின் வடிவத்தை மாற்ற விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும்.
  • பின் அந்த வீடியோ கோப்பினை நீங்கள் Audio வடிவத்திற்கா? அல்லது Video வடிவத்திற்கா? மாற்ற வேண்டும் என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
  • இனி குறிப்பிட்ட Audio/Video கோப்பு எந்த வகையில் அமையவேண்டும் என்பதனை தெரிவு செய்ய வேண்டும். (flv, mkv, mp4, avi, swf, 3gp, flac, wmv, vob, rmvb, mov, m4v, midi, mp4, mpg, mpeg, m2ts, mts, mp3, wma, wav, m4a, m4p, cda, aac, aiff, ogg) 
  • அல்லது குறிப்பிட்ட Audio/Video கோப்பினை எந்த சாதனத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற விரும்புகின்றார்கள் என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

அவ்வளவுதான்.

இனி Convert என்பதனை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பின் வடிவத்தினை மிக இலகுவாக மாற்றிக்கொள்ளலாம்.

அத்துடன் YouTube தளத்தில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்களையும் இந்த மென்பொருளின் ஊடாக உங்களுக்குத் தேவையான Audio அல்லது Video வடிவத்திற்கு மாற்றி தரவிறக்கிக் கொள்ள முடியும்.இவைகள் தவிர இந்த மென்பொருளின் ஊடாக ஒரு வீடியோ கோப்பினை ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றுகையில் அதன் செயற்பாட்டை துண்டிக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடிவதுடன் நீண்டதொரு வீடியோ கோப்பு அல்லது அதிகமான வீடியோ கோப்புக்களை Convert செய்ய வேண்டி இருப்பின் அவற்றின் செயற்பாடு முடிந்த பின் கணணியை தானாகவே Shutdown செய்யும் வகையில் அமைத்துக்கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உண்டு.

 இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top