எமது கணனியின் மூலம் நாம் பயன்களை பெற்றுக்கொள்ள உள்ளீட்டுச் சாதனங்களான Keyboard, Mouse போன்றவைகள் அத்தியாவசியமான சாதனங்கள் ஆகும். இருந்தாலும் சில சந்தர்பங்களில் அவற்றின் செயற்பாட்டை முடக்கி வைக்க முடியுமானால் நன்றாக இருக்குமே என நினைக்கவும் தோன்றும்.

Disable Keyboard in windows


உதாரணமாக எம்மை அறியாமல் எமது கணனியை சிறுவர்கள் அல்லது வேறு நபர்கள் இயக்கும் போது Keyboard இன் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதால் அவர்களை ஏமாற்றம் அடையச் செய்ய முடியும்.இதற்கு உதவுகின்றது Keyboard Locker எனும் சிறிய மென்பொருள் இதனை தரவிறக்கிய பின் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை KeyboardLocker.exe எனும் கோப்பினை Double Click செய்வதன் மூலம் இது இயங்கத்தொடங்கிவிடும் பின் Ctrl+Alt+L விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் Keyboard இன் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளலாம். பின் Keyboard இல் உள்ள எந்த ஒரு விசையும் இயங்காது.

KeyboardLocker with keyboard shortcut

பின் Keyboard இன் செயற்பாட்டை மீண்டும் துவக்கிக் கொள்ள unlock என Keyboard இல் தட்டச்சு செய்யுங்கள். இனி Keyboard மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.

இதனை தரவிறக்கிக் கொள்ள இங்கே சுட்டுக.

Keyboard Locker  எனும் இந்த மென்பொருளை உங்கள் கணணி துவங்கும் போதே துவக்கிக் கொள்ள விரும்பினால் அதனை Start Up கோப்புறையில் சேர்த்துக் கொள்ளலாம்.கணனி துவங்கும் போது நீங்கள் இதனை செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


  • நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program (Win+R) ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
  • நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  • இனி திறக்கும் கோப்புறையில் Right Click செய்து New ====> Shortcut என்பதனை சுட்டுக.

  • பின் தோன்றும் சாளரத்தில் Browse என்பதனை சுட்டுவதன் ஊடாக நீங்கள் ஏற்கனவே தரவிறக்கிய KeyboardLocker எனும் மென்பொருளை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்தி வெளியேறுக.


அவ்வளவு தான்.

Download Keyboard Locker


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top