இன்று கணனியுடன் இணைந்தாற்போல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் போன்றவற்றின் வளர்ச்சியும் அதற்கான கேள்வியும் அதிகம் காணப்படுகின்றது.

இலவச வீடியோ கன்வெர்ட்டர்


எனவே கணனியுடன் ஆளுக்கொரு ஸ்மார்ட் சாதனம் என மலிந்துவிட்ட இன்றைய யுகத்தில் கணனியில் இருந்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் ஸ்மார்ட் சாதனங்களிலிருந்து கணனிக்கும் என தரவுகள் பரிமாறப்படுவது வழமையாகிவிட்டது.

அந்த வகையில் எமது கணனியில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்களை எமது ஸ்மார்ட் போன்களில் இயங்குவதற்கு ஏற்ற வகையில் அதன் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் வடிவத்தை மாத்திரம் மாற்றித்தருகிறது WonderFox  வீடியோ கன்வெர்ட்டர்  எனும் மென்பொருள்.


  • இந்த மென்பொருளானது மிகவேகமாக இயங்கக்கூடியதும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ கோப்புக்களை ஒரே நேரத்தில் அவற்றின் வடிவத்தினை மாற்றித் தரக்கூடியதும் ஆகும்.
  • 200 இற்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு ஆதரவு  அளிக்கக்கூடிய இது Video to HD video, video to AVI, video to MP4, video to MKV, video to WMV, video to H264, video to AVC, video to MPG, video to MOV, video to 3GP, video to MP3, OGG, AC3, AAC, MKA, WMA, FLAC, M4A, என ஏராளமான  Audio/Video கோப்புக்களை ஒருவடிவில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள உதவுகிறது.
  • மேலும் iPad mini 2, iPad Air, The New iPad, iPhone 5S/C, iPhone 4s/4, iPod series, Apple TV, BlackBerry Phones and PlayBook, Samsung Smartphone and tab, Nexus, Kindle Fire, HTC, Nokia (Lumia 2520, Icon, 1520 included), Sony cell phone and game player, Microsoft Surface, XBox, Zune, kinds of TVs என ஒவ்வொரு சாதனங்களுக்கும் தனித்தனியே Audio/Video வடிவங்களை இது கொண்டுள்ளமையால் எந்த சாதனத்துக்கு எந்த வடிவத்தினை தெரிவு செய்ய வேண்டும் என்ற சிக்கல் உங்களுக்கு ஏற்படாது.
  • இவைகள் தவிர வீடியோ கோப்புக்களை Edit செய்து கொள்ள என இதில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளதுடன் இயங்கக்கூடிய வீடியோ கோப்புக்களில் இருந்து Snapshot எடுத்துக் கொள்ளவும் முடிகிறது.
  • அத்துடன் இணையத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களின் முகவரியை இதில் உள்ளிடுவதன் மூலம் அவற்றினை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள முடிவதுடன் உங்கள் கணினியில் உள்ள Audio/Video கோப்புக்களை பயன்படுத்தி உங்கள் Smart சாதனங்களுக்கு அழகிய Ring Tone களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளானது 2600 இந்திய ருபா கட்டணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு மென்பொருளாகும்.   இருப்பினும் எதிர்வரும்  நவம்பர் 8 ஆம் திகதிக்குள் (Nov 8, 2015) இதனை இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். (தரவிறக்கப்படும் கோப்பில் அதற்கான Licence Key உம் தரப்பட்டுள்ளது)நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் சென்று Get It Free Now என்பதனை அலுத்துக.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top