Facebook தளம் மூலமாக நாம் எமது நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் அரட்டையில் (Chatting) ஈடுபடும்போது நாம் அவர்களுக்கு அனுப்பிய செய்தியை அவர்கள் படித்து விட்டார்களா? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் seen என்ற சொல்லுடன் பார்க்கப்பட்ட நேரமும் காண்பிக்கப்படும் அல்லவா?

facebook unseen in chat


அதே போல் அவர்களால் எமக்கு அனுப்பப்படும் செய்தியை நாம் பார்த்துவிட்டோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் குறிப்பிட்ட செய்திக்குக் கீழ் seen என்ற சொல்லுடன் பார்க்கப்பட்ட நேரமும் காண்பிக்கப்படும் என்பது நாம் அறிந்த விடயமே.

disable seen in tamil

இருப்பினும் அந்த செய்தியை அனுப்பியவருக்கு குறிப்பிட்ட செய்தியை நாம் பார்த்தோமா? அல்லது பார்க்கவில்லையா? என்பதை நீங்கள் தெரியப்படுத்த விரும்பவில்லை எனின் உங்களுக்கு உதவுகின்றது Unseen எனும் Google Chrome இணைய உலாவிக்கான நீட்சி.



இதனை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்வதன் மூலம் அவர்களால் எமக்கு அனுப்பப்பட்ட செய்தியை நாம் படித்துவிட்டோமா? என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியாத வகையில் Seen என்ற வசதி அவர்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது. இருப்பினும் எப்பொழுதும் போல் நாம் அவார்களுக்கு அனுப்பிய செய்தியை அவர்கள் படித்துவிட்டார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் நாம் ஒரு செய்தியை அரட்டைக்கான சாளரத்தில் (Chat Box) தட்டச்சு செய்யும் போது நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட சிறிய ஒரு அடையாளம் அவர்களுக்கு காண்பிக்கப்படும்.


அதனையும் நீங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்க விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  • இந்த நீட்சியை உங்கள் Google Chrome இணைய உலாவியில் நிறுவிய பின் இணைய உலாவியின் Address Bar இல் chrome://extensions என தட்டச்சு செய்க.
  • இனி உங்கள் இணைய உலாவியில் நிறுவப்பட்டுள்ள நீட்சிகள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும்.
  • பின் Facebook Unseen எனும் நீட்சியில் Option என்பதை சுட்டுக.
  • பிறகு தோன்றும் புதிய சாளரத்தில் Blocks என்பதற்குக் கீழ் இருக்கக்கூடிய block the typing indicator of the chat என்பதில் Tick அடையாளத்தினை இடுக.

chrome extension option


அவ்வளவுதான்.

இனி நீங்கள் தட்டச்சு செய்வதற்கான அடையாளமும் அவர்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது.


இதனை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top