தவிர்க்கமுடியாத ஒரு சாதனமாக கணணி மாறிவிட்ட இன்றைய நிலையில் வீட்டுக்கு வீடு ஆளுக்கு ஆள் என கணனியின் ஆதிக்கம் பெருகிவிட்டது.

அந்த வகையில் நாம் கணனிமூலம் ஏராளமான பல கருமங்களை நிறைவற்றிக் கொள்கிகின்றோம் அல்லவா?இவ்வாறன தேவைகளை கணணி மூலம் நிறைவேற்றிக்கொள்ள மென்பொருள்கள் என்பது பெரிதும் துணை புரிகின்றது.
இருப்பினும் இவ்வாறான மென்பொருள்களை எமது கணனியை பயன்படுத்தும் ஏனைய நபர்கள் திறந்து பயன்படுத்துவதனால் எமது தனிப்பட்ட தகவல்களை அவர்களால் பார்க்க முடிவதுடன் எமது வசதிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட மென்பொருளில் நாம் மாற்றி அமைத்திருக்கக் கூடிய அமைப்புக்களை (Settings) அவர்கள் வேறு விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விடவும் முடியும்.

எனவே இவ்வாறு எமது கணனியில் இருக்கக்கூடிய மென்பொருள்களை ஏனையவர்கள் திறந்து பயன்படுத்துவதால் மேற்குறிப்பிட்ட சிரமங்கள் மட்டுமின்றி இன்னும் பல சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஆகவே இவ்வாறான சிரமங்களை நீக்கிக் கொள்ள குறிப்பிட்ட மென்பொருளை கணனியில் இயங்க முடியாதவாறு அமைத்துக்கொள்ள முடியும். 


இதற்கு எவ்வித மென்பொருள்களும் அவசியமில்லை கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.1. முதலில் உங்கள் கணனியில் Control Panel சென்று Folder Option செல்க.
2. பின் திறக்கும் சாளரத்தில் View எனும் பகுதிக்குக்கீழ் Hide extensions for known file types என்பதற்கு முன் இருக்கும் Tick அடையாளத்தை எடுத்து விட்டு OK அழுத்தி வெளியேறுக.

3. இனி உங்கள் கணனியில் New Text Document ஒன்றினை உருவாக்கி கீழுள்ள நிரல்களை அதனுள் Past செய்து கொள்க.


Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"DisallowRun"=dword:00000001
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer\DisallowRun]
"1"="someapplication.exe"
"2"="anotherapp.exe"  • இவற்றினை Copy செய்ய முடியவில்லையா? அப்படியாயின் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் Copy செய்து கொள்க.


4. பின் அந்த நிரல்களுள் 
"1"="someapplication.exe"
"2"="anotherapp.exe"
போன்றவற்றினை அவதானிக்க முடியும்.  • இனி நீங்கள் எந்த மென்பொருளின் செயற்பாட்டை உங்கள் கணனியில் தடை செய்ய வேண்டுமோ அந்த மென்பொருளின் .exe கோப்பின் பெயரை someapplication.exe என்பதற்கு பதிலாக இட வேண்டும்.
  • பின் இன்னுமொரு மென்பொருளின் செயற்பாட்டையும் தடை செய்ய வேண்டும் எனின் அதன் .exe கோப்பிற்கான பெயரை anotherapp.exe எனும் இடத்தில் இட வேண்டும்.
  • இவ்வாறு "1", "2"', "3" என எத்தனை மென்பொருள்களினது செயற்பாட்டையும் தடை செய்யலாம்.


குறிப்பிட்ட மென்பொருளின் .exe கோப்பின் பெயரை எங்கிருந்து பெறவேண்டும் என கேட்கின்றீர்களா?

  • பொதுவாக நாம் கணனியில் நிறுவக்கூடிய மென்பொருள்களின் .exe கோப்பு உட்பட ஏனைய கோப்புக்கள் C:\Program Files எனும் இடத்திலேயே சேமிக்கப்படுகின்றது. 
  • உதாரணத்திற்கு நீங்கள் Mozilla Firefox இன் .exe கோப்பினை பெற வேண்டும் எனின் C:\Program Files\Mozilla Firefox எனும் கோப்புறையினுள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.  • ஆனாலும் கணனியில் தரப்பட்டுள்ள Notepad மற்றும் ஏனைய மென்பொருள்கள் C:\Windows\System32 எனும் இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
  • உதாரணத்திற்கு உங்கள் கணனியில் Notepad, Firefox மற்றும் Photo Scape ஆகிய மென்பொருள்கள் இயங்க முடியாதவாறு அமைக்க விரும்பினால் குறிப்பிட்ட நிரல்கள் பின்வருமாறு அமையும்.


Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"DisallowRun"=dword:00000001
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer\DisallowRun]
"1"="notepad.exe"
"2"="firefox.exe"
"3"="PhotoScape.exe"5. பின் அதனை சேமித்து விட்டு குறிப்பிட்ட Text Document இற்கு Block.reg என பெயரிடுக.6. இனி அது Registry கோப்பாக மாற்றம் அடைந்திருக்கும். இனி அதனை Double Click செய்து தோன்றும் செய்திகளுக்கு Yes என்பதனை அலுத்துக.

அவ்வளவுதான்.


இனி குறிப்பிட்ட மென்பொருள்கள் இயங்கமாட்டாது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட மென்பொருள்களின் தடையை நீக்க வேண்டுமா? 


1. அப்படியாயின் கீழுள்ள இணைப்பில் சென்று தரப்பட்டுள்ள நிரல்களை Copy செய்து Text Document ஒன்றில் Past செய்க.

Click Here And Copy Your Code

(இதில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை.)

2. பின் அதற்கு Allow.reg என Rename செய்க.

இனி அதனை Double Click செய்து தோன்றும் செய்திகளுக்கு Yes என்பதனை அழுத்துவதன் மூலம் அவற்றுக்கான தடையை நீக்கிக் கொள்ளலாம்.


இதனையும் பார்க்க: Windows கணனியில் எந்த வகையிலும் மாற்ற முடியாத வகையில் Desktop Wallpaper அமைப்பது எவ்வாறு?Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top