கணினி மூலம் நாம் ஏராளமான தேவைகளை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்கின்றோம். இதற்கு  மென்பொருள்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.அந்தவகையில் நாம் கணினி மூலம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய பல்வேறு தேவைகளுக்குமான மென்பொருள்களை தருகின்றது Ashampoo நிறுவனம்.


இந்நிறுவனத்தின் ஏராளமான மென்பொருள்களை கட்டணம் செலுத்தியே பெற வேண்டும் இருப்பினும் கிட்டத்தட்ட 10500 இந்திய ரூபா பெறுமதியான ஐந்து மென்பொருள்களை இந்நிறுவனம் இலவசமாக வழங்குகின்றது. அவைகள் பின்வருமாறு.

Ashampoo Burning Studio 2016

இது நமது கணினியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், ஒலிக்கோப்புகள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒன்றையும்  CD, DVD மற்றும் Blu-ray போன்ற இருவட்டுக்களுக்கு பிரதி (Burning) செய்து கொள்ள உதவுகின்றது.

மேலும் இதன் மூலமே உங்கள் புகைப்படங்களை கொண்டு அழகிய Slide Show இனை உருவாக்கி அதனை CD, DVD, Blu-ray போன்ற சாதனங்களுக்கு பிரதி செய்து கொள்ளவும் முடியும்.

இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளின் சந்தைப்பெருமதியானது 40 அமெரிக்க டொலர்களாகும்.


Ashampoo Music Studio 5


இந்த மென்பொருள் மூலம் இசைக் கோப்புக்களை உங்களுக்கு தேவையான விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ள முடிவதுடன் உங்கள் ஸ்மார்ட் போன்களுக்கான Ring Tones போன்றவைகளையும் இதன் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் சந்தைப்பெருமதி 30 அமெரிக்க டொலர்களாகும்.


Ashampoo Snap 7


இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணினியின் திரையில் இருப்பவைகளை மிகவும் துல்லியமாக படம் பிடித்துக் கொள்ளவும் அவற்றை குறிப்பிட்ட மென்பொருள் மூலமே எடிட்டிங் செய்து கொள்ளவும் முடியும்.

இதன் சந்தைப்பெருமதி 30 அமெரிக்க டொலர்களாகும்.Ashampoo Slideshow Studio 2015


நீங்கள் விரும்பும் புகைப்படங்களுக்கு அழகிய அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்தி அவற்றை தானாக இயங்கும் ஸ்லைட் ஷோ ஒன்றாக தயாரித்துக் கொள்ள முடிவதுடன் அவற்றுக்கு நீங்கள் விரும்பும் பின்னணி இசைகளையும் வழங்க முடியும்.

இதன் சந்தைப்பெருமதி 20 அமெரிக்க டொலர்களாகும்.


Ashampoo WinOptimizer 11


இந்த மென்பொருளானது எமது கணினியில் இருக்கக் கூடிய குறைபாடுகளை கண்டு நிவர்த்தி செய்வதன் மூலம் கணினியை வேகமாக இயங்கச் செய்கிறது.

இதன் சந்தைப்பெருமதி 40 அமெரிக்க டொலர்களாகும்.


மேலும் இதனையும் பார்க்க:


மேற்குறிப்பிட்ட அனைத்து மென்பொருள்களினதும் பெறுமதி கிட்டத்தட்ட 160 அமெரிக்க டொலர்களாகும் இருப்பினும் பின்வரும் இணைப்பில் சென்று GIFT எனும் Coupon Code ஐ உள்ளிடுவதன் மூலம் அவைகளில் நீங்கள் விரும்பும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின் அதனை திறக்கும் போது தோன்றும் சாளரத்தில் Request Full Free Version Key என்பதனை சுட்டுவதன் மூலம் அதற்கான இணையப் பக்கத்திற்கு சென்று இலவச License Code ஐ பெற்றுக்கொள்ளலாம்.இவற்றை இலவசமாக தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
License Code ஐ பெறும்போது நீங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் இந்த இணைப்பில் இருக்கும் எமது முகநூல் பதிவை Like & Share செய்த பின் Comment செய்க. உங்களுக்கான முழு விளக்கத்தை தருகிறோம்.

Love to hear what you think!

2 comments:

 
Top