• உங்கள் Android சாதனத்துக்கு நீங்கள் தொடர்ச்சியாக ஒரே கடவுச்சொல்லினை பயன்படுத்துவதனால் அதனை இன்னுமொருவர் பார்த்து ஊகித்துக்கொள்ளலாம் என அஞ்சுபவரா நீங்கள்?
  • அல்லது அடிக்கடி வெவ்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்துவதால் அதனை ஞாபகத்தில் வைப்பது சிரமமா?

  • ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு முறையும் வெவ்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்தி உங்கள் உறவினர்கள் நண்பர்களை ஆச்சரியமூட்ட விரும்புகின்றீர்களா?

Smart Phone lock android தமிழ்


அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Smart Phone lock  எனும் Android சாதனத்துக்கான செயலி 
இந்த செயலியானது  ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு முறையும் குறிப்பிட்ட சாதனத்தின் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள உதவுகின்றது.

இது எப்படி முடியும் என எண்ணுகின்றீர்களா?


அதாவது உங்கள் Android சாதனத்தின் நேரம் 10:10 PM எனின் உங்கள் கடவுச்சொல்லும் 1010 ஆகும். அல்லது நேரம் 5:10 PM எனின் உங்கள் கடவுச்சொல் 0510 ஆகும்.ஒரு வேலை இந்த செயலியை பற்றி அறிந்தவர் உங்கள் Android சாதனத்தின் கடவுச்சொல்லினை மிக இலகுவில் அறிந்து கொள்ளலாமே என எண்ணுகின்றீர்களா?


இந்த செயலியில் இதற்கும் தீர்வு இருக்கின்றது. அதாவது உங்கள் Android சாதனத்தின் நேரம் 10:10 PM எனின் அதனுடன் நீங்கள் விரும்பும் இன்னும் சில நிடமிடங்களை சேர்த்து அதன் கடவுச்சொல்லாக அமைக்கும் வசதி உண்டு.
உதாரணத்திற்கு நேரம் 10:10 PM எனின் அதனுடன் நீங்கள் சேர்க்கும் நிமிடங்கள் 2 என வைத்துக்கொள்வோம். அப்படியானால் உங்கள் கடவுச்சொல் 1012 ஆகும்.

மேற்குறிப்பிட்ட வகையில் உங்கள் கடவுச்சொல்லை மேலும் வலுவானதாக ஆக்கிக் கொள்ள அதனுடன் இன்னும் சில நிமிடங்களை சேர்க்க விரும்பினால் இந்த செயலியை திறந்து Offset modifier என்பதில் நீங்கள் விரும்பும் நிமிடங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனையும் பார்க்க: மிகச்சிறந்த வசதிகளை தரும் Android சாதனத்துக்கான இலவச File Manager மென்பொருள்.

இது தவிர நேரத்தை தலைகீழாக மாற்றுவதன் மூலம் உங்கள் Android சாதனத்துகான கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு.
அதாவது உங்கள் Android சாதனத்தின் நேரம் 10:25 PM எனின் உங்கள் கடவுச்சொல் 5201 என தலைகீழாக அமையும். இதனை செயற்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட செயலியை திறந்து Reverse modifier என்பதனை சுட்டுக.
மேலும் இந்த செயலியின் கீழ் பகுதியில் இருக்கும் Hide Icon என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட செயலியை ஏனையவர்களுக்கு தென்படதவாறு அமைத்துக் கொள்ளவும் முடியும். இதனை சுட்டியவுடன் இந்த செயலிக்கான Icon உங்கள் Android சாதனத்தில் இருந்து மறைக்கப்பட்டு விடும். பின் நீங்கள் மாத்திரம் அதனை பயன்படுத்திக் கொள்ள Dial Pad இல் 1234 என்பதனை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட செயலியை திறந்து கொள்ள முடியும்.


அத்துடன் இந்த செயலியை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவிய பின் தேவைப்படும் போது பயன்படுத்தும் வகையில் உங்களால் இலகுவில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு பிரதான கடவுச்சொல்லை இட்டுக்கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் உறவினர்களினதோ அல்லது நண்பர்களினதோ தொலை பேசி என்னை இதில் இட்டுக்கொல்வதன் மூலம் நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விடும் சந்தர்பங்களில் அதனை SMS மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.


இந்த செயலியை உங்கள் Android சாதனத்திற்கும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள சாளரத்தின் மூலம் தரவிறக்கிக் கொள்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top