நாம் எமது கணனியில் ஏராளமான கோப்புக்கள் ஆவணங்கள் போன்றவற்றினை சேமித்து வைத்திருப்போம் அல்லவா?

இதன் போது குறிப்பிட்ட ஏதாவது ஒன்றினை நீங்கள் தேடிப் பெற வேண்டிய சந்தர்பத்தில் அதனை நீங்கள் கணனியில் சேமித்த இடம் மறந்து விட்டால் என்ன செய்வது?

இவ்வாறான சந்தர்பங்களில் Windows கணனியில் தரப்பட்டுள்ள Search எனும் வசதியை பயன்படுத்துவோம் அல்லவா?

அனால் அவ்வாறு கோப்புக்கள் ஆவணங்களை தேடிப்பெற்றுக் கொள்வதற்கு Windows கணனியில் தரப்பட்டுள்ள Search எனும் வசதி அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. 


இருப்பினும் Everything எனப்படும் Windows கணனிக்கான மூன்றாம் நபர் மென்பொருளானது எமது கணனியில் இருக்கக் கூடிய எந்த ஒன்றினையும் மிக இலகுவாகும் ஒரு சில நொடிப்பொழுதிலும் தேடிப்பெற்றுக் கொள்ள உதாவுகின்றது.
வெறும் 334 KB அளவையே கொண்டுள்ள இந்த சிறிய மென்பொருளை எந்த ஒரு கணணியிலும் மிக இலகுவாக நிறுவி பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை, அல்லது கோப்புறைகளை நீங்கள் தேடும் போது அதன் பெயரை உள்ளிட்டோ அல்லது குறிப்பிட்ட கோப்பிற்கான வடிவத்தை (Format) உள்ளிட்டோ தேடிப்பெறலாம்.  • உதாரணமாக உங்கள் கணனியில் இருக்கும் Sample.Pdf எனும் கோப்பினை தேடிப்பெற Sample என்பதனை  குறிப்பிட்ட மென்பொருளில் தட்டச்சு செய்து தேடிப்பெற முடிவதுடன் *.pdf என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் உங்கள் கணனியில் இருக்கக் கூடிய அனைத்து pdf கோப்புக்களும் பட்டியல் படுத்தப்படும் பின் உங்களுக்குத் தேவையான Sample.pdf என்பதனை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் குறிப்பிட்ட மென்பொருள் மூலம் உங்கள் கணனியில் இருக்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட வெவேறான வடிவங்களில் அமைந்த கோப்புக்களை தேடிப்பெறவும் முடியும்.  • உதாரணத்திற்கு உங்கள் கணனியில் .doc வடிவில் அமைந்த அனைத்து Microsoft Word ஆவணங்களையும் .mp3 வடிவில் அமைந்த அனைத்து பாடல்களையும் தேடிப்பெற விரும்பினால் *.doc|*.mp3 என தட்டச்சு செய்வதன் மூலம் தேடிப்பெறலாம்.


கணனியை பயான்படுத்தும் எந்தா ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தைக் கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top