நாம் எமது கணனியில் உள்ள Keyboard ஐ பயன்படுத்தி எத்தனையோ ஆயிரம் சொற்களை தட்டச்சு செய்திருப்போம் அல்லவா? அவைகளை நாம் தட்டச்சு செய்த முறை சரி தான? என்பதை சிந்தித்து உள்ளீர்களா?

நாம் தட்டச்சு செய்கையில் கணனியின் திரையை பார்த்தவாறு தட்டச்சு செய்யும் முறை தான் சரியான முறை அதிலும் எமது Keyboard ஐ இரு வேறு பகுதிகளாக பிரித்து இரண்டு கைகளாலும் தட்டச்சு செய்தல் வேண்டும்.

மேலும் Keyboard இல் ஆங்கில எழுத்தான J மற்றும் F ஆகியவைகளை எமது ஆள்காட்டி விரலால் பயன்படுத்த வேண்டும் இதுவே Keyboard இன் மையப் பகுதியாகவும் அமைய வேண்டும். இதனை தொட்டுணரக்கூடிய வகையில் ஒவ்வொரு Keyboard இலும் சிறிய அடையாளம் ஒன்றும் தரப்பட்டிருக்கும்.

மேலும் எமது பெருவிரல்களால் Space Bar ஐயும் சிறு விரலால் Enter விசைகளையும் பயன்படுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த முறையில் தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தாலும் காலப்போக்கில் அதுவே பழக்கமாகி விடும்.

எனவே இதனடிப்படையில் மிகவேகமாக தட்டச்சு செய்ய எம்மை பயிற்றுவிக்கின்றது Typingclub எனும் அருமையான ஒரு இணைய தளம்.  • நாம் மிக வேகமாக தட்டச்சு செய்து கொள்வதற்காக அடிப்படையிலிருந்தே கற்றுக்கொள்ள உதவும் இந்த தளமானது வெவ்வேறு பட்ட 100 கட்டங்களைக் கொண்டுள்ளது.

  • ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு புதிய எழுத்துக்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான எளிமையான விளக்கத்தினை தருவதுடன் அதனை சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவில் புரிந்து கொள்ளவும் முடியும்.

  • மேலும் நீங்கள் தட்டச்சு செய்ததன் வேகம் மற்றும் தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட பிழைகள் என்பனவற்றை அடிப்படையாக வைத்து அதற்கான புள்ளிகளையும் வழங்குவதுடன் ஒன்று தொடக்கம் மூன்று வரையான நட்சத்திர அடையாளங்கள் மூலம் அதன் தரத்தினையும் தீர்மானிக்கின்றது.

  • இந்த தளம் மூலம் பயிற்சியை பெறுவதற்கு எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் நீங்கள் தொடர்ச்சியாக இந்த தளத்தை பயன்படுத்துகையில் உங்கள் புள்ளிகளை சேமித்துக் கொள்வதற்கும் நீங்கள் ஏற்கனவே விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்வதற்கும் இந்த தளத்தில் இலவசமாக கணக்கொன்றினை ஆரம்பித்துக் கொள்ளலாம்.எவ்வித வரையறையுமின்றி முற்றிலும் இலவசமாக சேவையை தரக்கூடிய இந்த தளமானது ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட கணினியை பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


நீங்களும் இந்த தளத்துக்குச் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
மேலும் இதனையும் பார்க்க: பல பாகங்களாக அமைத்திருக்கும் உங்கள் கோப்புக்களை ஒரே கோப்பாக பெற்றுக்கொள்ள உதவும் அருமையான ஒரு இணையதளம்.
மேலும் பல பயனுள்ள பதிவுகளை தொடர்ச்சியாக பெற்றிட Facebook மற்றும் Google Plus போன்ற எமது சமூக வலைதளங்களின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

1 comments:

  1. மிக்க நன்றி இந்த தகவலை தந்தமைக்கு மிகவும் பயனுள்ள கருத்து

    பதிலளிநீக்கு

 
Top