எந்த ஒரு Mobile சாதனத்திலும் தடையின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு வசதியே குறுஞ்செய்தி (SMS) வசதியாகும்.

அந்தவகையில் எமது மொபைல் சாதனத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட இன்னும் ஏராளமான நபர்களும் நிறுவனங்களும் அனுப்பக் கூடிய குறுஞ்செய்திகள் எமக்கு அன்றாடம் வந்து குவிகின்றன அல்லவா?

அவ்வாறு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் எமக்கு பிடித்தமான குறுஞ்செய்திகளை அல்லது பிறகொரு சந்தர்பத்தில் தேவைப்படுமோ என நாம் எண்ணக் கூடிய சில குறுஞ்செய்திகளை எமக்கு அழிக்கவும் மனம் வராது ஆனால் அவற்றினை அளவுக்கு அதிகமாக சேமிக்க எமது மொபைல் சாதனமும் இடம் தராது.

அவ்வாறு சேமித்துக் கொள்ள முடிந்தாலும் தமது Mobile சாதனம் திடீர் என தொலைந்துவிடும் சந்தர்பத்திலோ அல்லது அது பழுதாகிவிடும் சந்தர்பத்திலோ நாம் எமது பெறுமதியான குறுஞ்செய்திகளை இழக்க வேண்டி ஏற்படும். இது போன்ற சிரமங்களிலிருந்து எமக்கு விடுதலை அளிக்கின்றது IFTTT தரும் சேவை.

IFTTT என்றால் என்ன என்பதை அறிய எமது முன்னைய பதிவை பார்க்க:இனி இதன் மூலம் எமது ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளை Google Drive இல் எவ்வாறு சேமித்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

இதற்கு பின்வரும் அம்சங்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

 • IFTTT தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டு கணக்கொன்றினை உருவாக்கி இருந்ததால் வேண்டும்.

Create An Account: IFTTT
 • IFTTT செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் நிறுவியிருக்க வேண்டும்.

Download IFTTT For Android: IFTTT
 • கூகுள் தளத்தில் ஒரு கணக்கை வைத்திருத்தல் வேண்டும். (Google தளத்தில் ஒரு கணக்கை வைத்திருப்பதன் மூலம் அதே கணக்கை பயன்படுத்தி அதன் எந்த ஒரு சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் எனின் Blogger, Google Drive, Google Keep, Play store என அத்தனையையும் பயன்படுத்தலாம்.)1. இனி நீங்கள் IFTTT தளத்துக்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியனவற்றை கொடுத்து உள்நுழையுங்கள்.

2. பின் குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டிருக்கும் Create Recipe என்பதனை சுட்டுங்கள்.3. பிறகு கீழே படத்தில் தரப்பட்டுள்ளவாறு  ifthisthanthat என்ற பெரிய அளவிலான ஆங்கில எழுத்துக்கள் தோன்றும்.
4. பின் அதில் this என்பதனை சுட்டுக. (இங்கு this என்பதன் கருத்து ஒரு விடயம் நடந்தால் என்பதாகும்.)

5. இனி Choose Trigger Channel என்பதற்குக் கீழ் IFTTT தளம் ஆதரவு அளிக்கும் அனைத்து சேவைகளும் தோன்றும். பின் அதில் Android SMS என்பதை சுட்டுக.6. பிறகு அது Choose a Trigger எனும் பகுதிக்குச் செல்லும். இனி அதில் பின்வருவனவற்றினை அவதானிக்கலாம். • Any new SMS received - உங்கள் Android சாதனத்துக்கு வரும் அனைத்து புதிய குறுஞ்செய்திகளும்.
 • Any new SMS sent- அனுப்பப்படும் அனைத்து புதிய குறுஞ்செய்திகளும்.
 • New SMS received from phone number- குறிப்பிட்ட ஒரு இலக்கத்தில் இருந்துவரும் புதிய குறுஞ்செய்திகள் மாத்திரம்.
 • New SMS sent to phone number- குறிப்பிட்ட ஒரு இலக்கத்திற்கு அனுப்பப்படும் புதிய குறுஞ்செய்திகள் மாத்திரம்.
 • New SMS received matches search - வரக்கூடிய குறுஞ்செய்தியில் குப்பிடப்படும் ஒரு சொல் இருந்தால் மாத்திரம்.
 • New SMS sent matches search - அனுப்பக்கூடிய குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் ஒரு சொல் இருந்தால் மாத்திரம்.7. மேற்கூறப்பட்டவைகளுள் நீங்கள் சேமிக்க விரும்பும் ஒன்றினை தெரிவு செய்க. • இங்கு நீங்கள் New SMS received from phone number அல்லது New SMS sent to phone number என்பதனை தெரிவு செய்தால் குறிப்பிட்ட இலக்கத்தையும் கொடுக்க வேண்டும். (அதாவது குறிப்பிட்ட இலக்கத்தில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மாத்திரமே சேமிக்கப்படும்)
 • அதே போல் New SMS received matches search அல்லது New SMS sent matches search என்பதனை தெரிவு செய்தால் குறிப்பிட்ட சொல்லினை கொடுக்க வேண்டும். (உங்களுக்கு வரும் அல்லது நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட சொல் இருந்தால் மாத்திரமே அது Google Drive இல் சேமிக்கப்படும்) • எமது தலைப்பின் படி Android சாதனத்துக்கு வரும் அனைத்து புதிய குறுஞ்செய்திகளையும் எவ்வாறு சேமிக்க முடியும் என்பதற்கு இணங்க Any new SMS received என்பதனை தெரிவு செய்து கொள்கிறேன்.


8. பின் Any new SMS received என்பதனை சுட்டிய பின் Create Trigger என்பதனை சுட்டுக.9. இனி கீழே படத்தில் உள்ளவாறு  ifthisthanthat என்ற பெரிய ஆங்கில எழுத்துக்கள் தோன்றும்.10. அதில் that என்பதனை சுட்டுக. (உருவாக்கப்பட்ட Trigger என்ன செய்யப்பட வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.)


11. பிறகு Choose Action Channel என்பதற்குக் கீழ் IFTTT ஆதரவு அளிக்கும் அனைத்து சேவைகளும் தோன்றும். நாம் இங்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளை Google Drive இல் சேமிக்க இருப்பதால் நான் இங்கு Google Drive என்பதனை தெரிவு செய்து கொள்கிறேன்.
 • (குறிப்பு: நீங்கள் IFTTT ஊடாக முதன்முதலாக Google Drive ஐ பயன்படுத்தும் போது உங்கள் Google கணக்கிற்கான User name, Password என்பதனை உள்ளிட்டு உள்நுழைந்த பின் IFTTT உங்கள் Google Drive இல் ஆவணங்களை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். இதற்கு Active என்ற Button ஐ சுட்டி இதனை செய்துக் கொள்க.)12. பின் தோன்றும் அடுத்த பகுதியில் Add row to spreadsheet என்பதை தெரிவு செய்க.13. இனி தோன்றும் பகுதியில் Formatted row என்பதற்குக் கீழ் இருக்கும் கட்டத்தில் SMS Recived என தட்டச்சு செய்து Create Action என்பதனை அலுத்துக.

14. அடுத்து Create Recipe என்பதனை அலுத்துக.அவ்வளவு தான்.

இனி உங்களுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை உங்களுக்கான Google Drive இல் IFTTT/SMS என்ற கோப்பில் தானாகவே சேமிக்கப்பட்டுவிடும்.இதற்கான விளக்கம் மிக நீண்டதாக இருந்தாலும் இந்த தளத்தை பயன்படுத்துவது மிக மிக இலகுவானதாகும்.

என்னையும் சேர்த்து இன்னும் ஏராளமானோர் இந்த தளம் தரக்கூடிய இது போன்ற பயனுள்ள சேவைகளை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் இதனை அதிகமானோர் அறிந்ததில்லை. நீங்களும் விரும்பினால் பயன்படுத்திதான் பாருங்களேன்.

எதிர்காலத்தில் இந்த தளம் மூலம் நாம் பெறக்கூடிய இன்னும் பல பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.

புதுமைகள் பல படைக்கவுள்ளோம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top