Windows இயங்குதளத்தின் அண்மைய பதிப்புக்கலான Windows 7/8/8.1 போன்றவைகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை Task Bar இல் Pin செய்து பயன்படுத்தும் வசதி தரப்பட்டிருந்தது.

இதன் மூலம் நாம் எமக்குத் தேவையான அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை Task Bar இல் Pin செய்து அதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக திறந்து பயன் படுத்தி வந்தோம்.

இருந்தாலும் எமது வன்தட்டின் ஒரு பாகத்தினை மென்பொருள்களை Pin செய்வது போல் Pin செய்ய முடிவதில்லை அவ்வாறு Pin செய்யும் போது அது Windows Explorer இன் ஒரு பகுதியாகவே இணைக்கப்படும். (கீழே படத்தில் உள்ளவாறு)


இருப்பினும் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் அவற்றினை சாதரணமாக மென்பொருள்களை Pin செய்வது போல் Pin  செய்து கொள்ளலாம்.



 இதன் மூலம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வன்தட்டின் பாகங்களை மிக இலகுவில் திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



எனவே படத்திலிருப்பது போன்று நீங்களும் உங்கள் வன்தட்டின் ஒரு பாகத்தையோ அல்லது பல பாகங்களையோ Task Bar இல் Pin செய்து கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.



  • முதலில் உங்கள் Desktop இல் Right Click செய்து New Text Document ஒன்றினை உருவாக்குக.



  • பின் நீங்கள் Task Bar இல் இணைக்க விரும்பும் வன்தட்டின் பாகத்துக்குரிய ஆங்கில எழுத்துடன் .exe என்பதை சேர்த்து குறிப்பிட்ட New Text Document  ஐ Rename செய்க.



  • உதாரணத்திற்கு Drive D ஐ Task Bar இல் இணைக்க விரும்பினால் Drive D.exe என Rename செய்ய வேண்டும். 
  • அவ்வாறு Rename செய்யும் போது தோன்றும் எச்சரிக்கை சாளரத்தில் Yes என்பதை அலுத்துக.



  • இனி குறிப்பிட்ட கோப்பு Exe கோப்பாக மாறி இருப்பதனை அவதானிக்கலாம். அவ்வாறு மாறவில்லையா அப்படியாயின் கீழே இணைக்கப் பட்டிருக்கும் எமது முகநூல் பதிவினை பாருங்கள்.



  • பின் அதனை Drag செய்து Task Bar இல் Drop செய்க. இனி அது Task Bar இல் பின் செய்யப் படும்.
  • பிறகு அதனை Right Click செய்யும் போது தொன்று சாளரத்தில் Drive D என்பதன் மேல் Right Click செய்து Properties செல்க.



  • இனி தோன்றும் சாளரத்தில் Shortcut என்ற Tab இற்கு கீழ் Target என்பதில் D:\ என்றும் Start in என்பதில் D: எனவும் தட்டச்சு செய்க.



  • பின் குறிப்பிட்ட சாளரத்திலேயே தரப்பட்டிருக்கும் Change Icon என்பதன் மூலம் வன்தட்டுக்கு பொருத்தமானதொரு Icon ஐ தெரிவு செய்து Ok அலுத்துக.

அவ்வளவுதான்.


இனி Pin செய்யப்பட்ட அதனை Click செய்து பாருங்கள் நீங்கள் இணைத்த அந்த வன்தட்டின் பாகம் திறக்கப்படுவதனை அவதானிக்கலாம்.

Bonus: மேலும் இதே போன்று நேரடியாக ஒரு கோப்புறையையும் திறந்து கொள்ளலாம் இதற்கு மேற்கூறிய Target எனும் இடத்தில் D:\ என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட கோப்பிற்கான முகவரியை (Path) வழங்குக.

உதாரணமாக Drive D இல் இருக்கும் Songs என்ற கோப்புறையை Task Bar மூலம் நேரடியாக திறக்க விரும்பினால் D:\Songs என்பதை Target எனும் இடத்தில் உள்ளிட வேண்டும்.

மேலும் இதனையும் பார்க்க: எவ்வித மென்பொருள்களினதும் துணையின்றி உங்கள் கணனியின் Hard Disk ஐ Partition செய்து கொள்வது எப்படி?




Love to hear what you think!

3 comments:

  1. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

    பதிலளிநீக்கு

 
Top