ஆரம்பத்தில் எமது புகைப்படங்களை அழகுபடுத்திக் கொள்ள நாம் மென்பொருள்களை நாட வேண்டி இருந்தாலும் அந்த நிலைமையை இன்று வரை நீடிக்க தகவல் தொழில்நுட்ப உலகம் இடம் தரவில்லை.


எனவே இன்று மென்பொருள்கள் மூலம் மட்டுமல்லாது இணையத்தின் மூலமும் Smart சாதனங்கள் மூலமும் எமது புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு ஏராளமான இணையதளங்களும், Smart சாதனங்களுக்கான மென்பொருள்களும் துணை புரிகின்றன.


online photo editor
அந்த வகையில் இணையத்தின் மூலம் உங்கள்  புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்ள என நாம் ஏற்கனவே பல தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம். அவற்றில் ஒவ்வொரு தளமும் மற்றைய தளத்தினை விட எதோ ஒன்றில் சிறந்ததாக விளங்கும். எனவே இதனை விட இது சிறந்தது என ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியாது.


புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்வதற்காக நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய இணையதளங்கள் போன்ற சிறந்த வசதிகளை தரக்கூடியதும் உலகில் அதிகமானவர்களால் பயன்படுத்தப் படுவதுமான ஒரு இணையதளமே FotoFlexer எனும் தளமாகும்.free online phot editor


  • இந்த தளமானது உங்கள் புகைப்படங்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக Auto Fix, Red Eye, Crop, Rotate, Flip போன்ற இன்னும் பல அடிப்படை வசதிகளை தருவதோடு உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் 30 இற்கும் மேற்பட்ட அழகிய விளைவுகளையும் ஏற்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

  • மேலும் உங்கள் புகைப்படங்களுக்கு Animation விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அழகிய பல உருக்களை (Stickers) இணைத்துக் கொள்ளவும் உங்கள் புகைப்படத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி மேலும் அழகுபடுத்திக் கொள்ள என Smooth, Sharpen, Fix Blemishes, Smooth wrinkles போன்ற வசதிகளையும் தருகின்றது.

  • இவைகள் தவிர குறிப்பிட்ட புகைப்படத்துக்கு நீங்கள் விரும்பும் சொற்களையோ வசனங்களையோ அழகிய எழுத்துக்களில் இணைத்துக் கொள்ளவும் முடிவதுடன் இன்னும் ஏராளமான பல வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

  • அத்துடன் Photo Bucket, Facebook, Flicker, Picasa, MySpace போன்ற தளங்களிலுள்ள உங்கள் புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட தளம் மூலமே நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் மாற்றங்களை ஏற்படுத்திய புகைப்படங்களை மிக இலகுவாக உங்கள் கணனியில் சேமித்துக் கொள்ளவோ மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளவோ முடியும்.


கணணியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளக் கூடிய வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்துக்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


மேலும் இதனையும் பார்க்க:  உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள உதவும் ஒரு அருமையான இணையதளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top