நீங்கள் இணையதளங்களை உலாவருவதற்கு உங்களுக்கென்றே சொந்தமான ஒரு கணனியை பயன்படுத்துபவரா? அல்லது பொது இடங்களில் உள்ள கணனியை பயன்படுத்துபவரா நீங்கள்?

நீங்கள் இதில் எந்த ரகமாயினும் சரி இணையத்துக்கு செல்ல  எப்படியும் ஒரு இணைய உலாவியை பயன்படுத்தியே தான் ஆகவேண்டும்.

அவ்வாறு நாம் இணையத்தை பயன்படுத்துகையில் எமக்கென்ற எத்தனையோ கணக்குகளுக்கு எமது User Name, Password ஆகியவைகளை உள்ளிட்டு உள் நுழைவோம் அல்லவா?
அவ்வாறு நாம் உள் நுழைகையில் எமது User Name, Password ஆகியவைகளை சேமிக்கட்டுமா என இணைய உலாவி உங்களிடம் அனுமதி கேட்ட ஞாபகம் உண்டா?
இது Firefox, Internet Explorer ஆகிய இணைய உலாவியில் Remember Password என்றும் Google Chrome, Opera இணைய உலாவிகளில் Save Password எனவும் தோன்றும்.

அவ்வாறு நீங்கள் அதனை குறிப்பிட்ட இணைய உலாவிகளில் சேமித்துக் கொள்வதன் மூலம் நீங்கள் மீண்டும் குறிப்பிட்ட கணக்குக்கு உள் நுழையும் போது அந்த கணக்குக்குரிய  User Name, Password ஆகியவைகளை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது அதாவது அவைகள் தானாகவே உள்ளிடப்படும்.

இது சிறந்த ஒரு வசதியாக இருந்தாலும் அவைகளை நாம் பாதுகாப்பாக பேண தவறும் பட்சத்தில் அதுவே நமது தனிப்பட்ட தகவல்களுக்கு வேட்டு வைக்கும் நிகழ்வாக அமைத்துவிடும்.

அதாவது இவ்வாறு இணைய உலாவிகளில் சேமிக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவற்றினை எந்த ஒருவரினாலும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். 


அந்தவகையில் இவ்வாறு சேமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவற்றினை வெவ்வேறு இணைய உலாவிகள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பதனை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அறிக.


நீங்கள் பயன்படுத்துவது Google Chrome இணைய உலாவி எனின் 


 • Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் customize and control google chrome எனும் Menu Button ஐ சுட்டி Settings என்பதை சுட்டுக. 
 • இனி குறிப்பிட்ட அமைப்புக்களுக்கான பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டிருக்கும் Show advanced settings என்பதை சுட்டுக.
 • பின் தோன்றும் மேலதிக பகுதியில் Password and forms என்பதற்குக் கீழ் Offer to save your web passwords.  Manage saved passwords என்பதில் Manage saved passwords என்பதை சுட்டுக. • இனி தோன்றும் புதிய சாளரத்தில் நீங்கள் சேமித்த மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவற்றை அவதானிக்கலாம். இதில் கடவுச்சொற்களானது கருப்பு நிற புள்ளிகளால் மறைக்கப்பட்டு இருக்கும் அவற்றினை பார்த்துக் கொள்வதற்கு அருகிலுள்ள Show என்ற Button ஐ அலுத்துக.நீங்கள் பயன்படுத்துவது Mozilla Firefox இணைய உலாவி எனின்.


 • Firefox இணைய உலாவியின் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் Open Menu எனும் Button ஐ சுட்டி Option என்பதை சுட்டுக.
 • பின் தோன்றும் சாளரத்தில் Security எனும் பகுதிக்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Save Password என்பதனை சுட்டுக. • இனி சேமிக்கப்பட்ட உங்கள் மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவைகள் காட்சிப்படுத்தப்படும் அதில் உங்கள் கடவுச்சொற்கள் கருப்பு நிற புள்ளிகளால் மறைக்கப்பட்டு இருக்கும் அவற்றினை பார்த்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட சாளரத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Show Password என்பதனை அலுத்துக.


நீங்கள் பயன்படுத்துவது Opera இணைய உலாவி எனின். • Opera இணைய உலாவியின் இடது பக்க மேல் மூலையில் உள்ள Customize and control Opera எனும் Menu ஐ சுட்டி Settings செல்க. அல்லது Alt+P விசைகளை ஒன்றாக அலுத்துக.
 • பின் தோன்றும் Setting பகுதியில் Privacy & Security என்பதை சுட்டுக.
 • இனி அந்த பகுதியில் உள்ள Passwords என்ற பகுதிக்குக் கீழ் இருக்கும் Manage Saved Password என்பதை சுட்டுக. • பின் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் என்பன காண்பிக்கப்படும்.
 • பிறகென்ன கருப்பு நிற புள்ளிகளால் மறைக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்த்துக் கொள்வதற்கு அருகிலுள்ள Show என்பதை சுட்ட வேண்டியது தான்.


குறிப்பு: Google Chrome மற்றும் Opera இணைய உலாவிகளில்  கருப்பு நிற புள்ளிகளால் மறைக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்த்துக் கொள்வதற்கு உங்கள் Windows கணனியின் குறிப்பிட்ட பயனர் கணக்குக்கான கடவுச்சொல் இருப்பின் அதனை உள்ளிட்டே பார்க்க முடியும் அவ்வாறு கடவுச்சொல் இல்லையெனின் நேரடியாக காண்பிக்கப்படும்.

ஆனால் Firefox இணைய உலாவியில் நேரடியாகவே காண்பிக்கப்பட்டு விடும்.


எனவே பொது இடங்களில் நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் போது உங்கள் கடவுச்சொற்களை தவறியேனும் இவ்வாறு சேமித்து விடாதீர்கள்.மேலும் இதனையும் பார்க்க: வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top