Foxit Reader மென்பொருளானது PDF கோப்புக்களை கணனியின் மூலமோ அல்லது Smart சாதனங்கள் மூலமோ பார்பதற்கும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் Print செய்து கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றது.


சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு கணனிப் பயனராலும் மிக இலகுவாக பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளானது கணனியில் மிக வேகமாக இயங்கக் கூடியதுமாகும்.





இந்த மென்பொருள் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.



  • உங்களுக்குத் தேவையான சொற்கள், படங்கள், உருக்கள் போன்றவைகளை இணைத்து அழகியதொரு PDF ஆவணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல PDF ஆவணங்களை திறந்து நிருவகிக்க முடியும்.
  • குறிப்பிட்ட PDF ஆவணத்தில் உள்ள முக்கிய சொற்களை தனியாக வேறுபடுத்தி காட்ட முடியும்.
  • குறிப்பிட்ட ஒரு சொல்லை அல்லது வசனத்தை கோடிட்டு காட்ட முடிவதுடன் தவறான சொற்களை திருத்திக் காட்டும் வகையில் அதற்கு குறுக்காக கோடிட்டுக் காட்டவும் முடியும். 
  • மேலும் குறிப்பிட்ட ஆவணத்தில் நீங்கள் விரும்பும் குறிப்புக்களை எழுதிக்கொள்ளவும் அதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியம்.
  • நீண்ட ஒரு PDF ஆவணத்தில் முக்கியமான ஒரு பக்கத்தினை Bookmark செய்து கொள்ள முடியும்.
  • குறிப்பிட்ட PDF ஆவணத்தில் இருக்கும் சொற்களை Search பகுதி மூலம் தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • PDF ஆவணங்களை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் வெவ்வேறு கோணங்களில் சுழற்றி பார்க்க முடியும்.
  • English, Dutch, French, German, Italian, Portuguese, Russian, Spanish போன்ற மொழிகளில் அமைந்த PDF ஆவணங்களின் உள்ளடக்கத்தை குரல் வடிவிலும் கேட்க முடியும்.
  • எழுத்துக்களும், படங்களும் இணைக்கப்பட்டுள்ள PDF ஆவணங்களில் படங்கள் தோன்றாத வகையில் எழுத்துக்களை மாத்திரம் வேறாக பார்க்கவும் முடியும். (Text Mode)
  • குறிப்பிட்ட மென்பொருள் மூலமே உங்கள் கையொப்பத்தினை உருவாக்கி அதனை PDF ஆவணங்களில் இணைத்துக் கொள்ளவும் முடியும்.
  • மேலும் Read mode எனும் வசதி மூலம் PDF ஆவணங்களை முழுமையான திரையில் பார்க்க முடிவதுடன் Reverse view என்பதன் மூலம் பல பக்கங்களை கொண்டுள்ள ஆவணத்தின் இறுதிப் பகுதியில் இருந்து ஆரம்பப் பகுதி நோக்கி பார்க்கவும் முடியும்.
  • எமது இரசனைக்கு ஏற்ப இதன் தோற்றத்திலும் வர்ணத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி பயன்படுத்தும் வகையில் அழகிய Skin களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.



இவைகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளை தரும் இந்த மென்பொருளை Windows கணனி உட்பட Android, iOS, Symbian போன்ற இயங்குதளங்களை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடிய சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்தலாம்.


மேற்குறிப்பிட்ட வசதிகள் Windows கணனிக்கான மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் இதன் Smart சாதனங்களுக்கான மென்பொருள் மூலமும் சிறந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.






மேலும் இதனையும் பார்க்க: PDF ஆவணங்களில் நீங்கள் விரும்பும் மாற்றத்தினை ஏற்படுத்த உதவும் இலவச மென்பொருள் 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top