ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டதும் பல லட்சக் கணக்கான வீடியோ கோப்புக்களை தன்னகமாக கொண்டதுமான ஒரு மிகப்பெரிய இணையதளமே YouTube ஆகும்.


Youtube tamilinfotech


அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் பகிரப்படும் ஏராளமான வீடியோ கோப்புக்கள் YouTube தளத்தில் சேமிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.அவ்வாறு பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் வெறும் திரைப்படங்கள், பாடல்கள், போன்ற சினிமா துறை சார்ந்தவை மட்டுமின்றி சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய விதத்திலும் ஏராளமான வீடியோ கோப்புக்களை கொண்டுள்ளமை மறுப்பதற்கு இல்லை. எனவே எதனை தெரிவு செய்ய வேண்டும் என்பது அவரவர் கைகளில் உள்ளது.

எது எப்படியோ YouTube தளத்தில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்படவில்லை. இருந்தாலும் சில மென்பொருள்களை பயன்படுத்தி அல்லது சில இணைய தளங்களின் உதவியுடன் அந்த வீடியோ கோப்புக்களை எம்மால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.


இதற்கு என ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் பெருபாலானவைகள் வரையறுக்கப்பட்ட வசதிகளையே தருகின்றது அத்துடன் முழுமையான பதிப்பை பயன்படுத்த கட்டணம் செலுத்தும் படியும் கேட்கலாம்.

இருப்பினும் Freemake Video Downloader எனும் மென்பொருளானது YouTube வீடியோ கோப்புக்களை மிக வேகமாக தரவிறக்கிக் கொள்ள உதவுவதுடன் YouTube தளம் மட்டுமின்றி இன்னும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள உதவுகின்றது.


video downloader tamilinfotech


  • இந்த மென்பொருளானது எவ்வித வரையறையும் இன்றி முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகும்.

  • இது இலவசம் என்பதால் இதிலுள்ள வசதிகளில் எதுவும் குறைபாடுகளை கொண்டது அல்ல.  இது கட்டண மென்பொருள்களுக்கு ஈடான அதே வசதிகளை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

  • குறிப்பிட்ட மென்பொருள் மூலம் நீங்கள் தரவிறக்கும் அதே நேரத்தில் அவற்றினை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அதன் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன்  AVI, MP4, MKV, WMV, 3GP, MP3 போன்ற ஏனைய வடிவங்களுக்கும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top