நாம் எமது Android சாதனத்தில் புகைப்படங்கள், ஆவணங்கள், பாடல்கள், வீடியோ கோப்புக்கள், என ஏராளமானவற்றை சேமித்து வைப்போம் அல்லவா?

அவ்வாறு சேமிக்கப்பட்ட எமது கோப்புக்களில் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றினை நாம் தேடிப்பெற வேண்டும் எனின் சில வேளைகளில் அது சங்கடமான காரியமாக அமைந்து விடும் சந்தர்பங்களும் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் நாம் அதனை எமது Android சாதனத்தில் எங்கு சேமித்து இருப்போம் என்ன பெயரில் சேமித்து இருப்போம் என்ற தகவல்களை எல்லாம் மறந்திருப்போம் ஆனால் சேமித்த அந்த கோப்பு மட்டும் எமது கண் முன்னே இருப்பது போல் இருக்கும்.


இது போன்ற சந்தர்பங்களில் நமக்கு உதவுகின்றது File Manager மென்பொருள் இதற்கென My Files எனும் வசதி Android சாதனங்களில் தரப்பட்டிருந்தாலும் அதன் மூலம் நம்மால் பூரண பயனை அடைய முடிவதில்லை.

இருந்தாலும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பூரண பயன்களை தந்துதவுகின்றது Tomi File Manager எனும் மென்பொருள்.


File Manager

Android சாதனங்களுக்காக முற்றிலும் இலவசமாக கிடைக்கக் கூடிய இந்த மென்பொருளானது பல பயனுள்ள வசதிகளை தன்னகமாக கொண்டுள்ளது.


  • பயன்படுத்துவதற்கு எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ள இந்த மென்பொருள் எமது அத்தனை கோப்புக்களையும் Music, Pictures, Videos, Documents Apps மற்றும் Download என்பதற்குக் கீழ் வகைப்படுத்தி தருகின்றது. இதன் மூலம் நாம் தேடிப்பெற வேண்டிய கோப்பினை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.


உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட ஏதாவது ஒரு புகைப்படத்தை தேடிப்பெற வேண்டும் எனின் Pictures என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் உள்ள அத்தனை புகைப்படங்களையும் இது பட்டியல் படுத்திக் காட்டும் பின் அதில் உங்களுக்குத் தேவையானதை மிக இலகுவில் கண்டு கொள்ளலாம்.  • அதே போன்று Directory எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் உள்ள கோப்புறைகளின் அடிப்படையிலும் வெவ்வேறாக பார்த்துக் கொள்ள முடிவதுடன் அவற்றினை கோப்புறைகளின் பெயரின் அடிப்படையிலோ, அளவின் அடிப்படையிலோ அல்லது அவைகள் மாற்றம் செய்யப்பட்ட திகதியின் அடிப்படையிலோ வகைப்படுத்திக் கொள்ளவும்.

android File Manager


  • மேலும் தேவையற்ற மென்பொருள்களை ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக் கொள்ளவும் முடியும்.


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள சாளரத்தின் மூலம் தரவிறக்கிக் கொள்க.

Love to hear what you think!

2 comments:

 
Top