எமது அன்றாட வாழ்வில் எத்தனயோ நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றுள் பல இனிமையான தருணங்களும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படவே செய்கின்றது.

அவற்றினை நாம் இன்னுமொரு சந்தர்பத்தில் மீட்டுப் பார்ப்பதற்காக ஏடுகளிலோ அல்லது வேறு விதத்திலோ பதிந்து வைத்துக்கொள்வோம் அல்லவா?
 

இதற்காக ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஏடுகளால் உருவாக்கப்பட்ட Diary பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றைய Digital உலகில் அந்த நிலைமையோ முற்றாக மாறத் தொடங்கியுள்ளது.


அந்தவகையில் இன்று ஒவ்வொருவரது கைகளிலும் இணைபிரியா நண்பனாக இருக்கக் கூடிய Smart சாதனங்களில் இதற்கான வசதி உட்புகுத்தப்பட்டுள்ளமையானது ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியதாகவே உள்ளது.

இவ்வாறு எமது அன்றாட நடவடிக்கைகளை பதிந்து பாதுகாத்து வருவதற்காக எமது Smart சாதனகளுக்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் Private Diary எனப்படக்கூடிய மென்பொருளானது சிறந்த வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளக்கூடியதுமாகும்.எமது அன்றாட நடவடிக்கைகளை பதிந்து கொள்வதற்காக எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ள இம்மென்பொருளானது பதியப்பட்ட தகவல்களை மிக இலகுவில் தேடி பெற்றுக்கொள்வதற்காக Search வசதியையும் பெரிய எழுத்துக்களில் அமைந்த திகதியினையும், குறிச்சொற்கள் இடும் வசதியினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் பதியப்பட்ட உங்கள் தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக கடவுச்சொல் இடும் வசதியினையும் Backup செய்து பிறகொரு சந்தர்பத்தில் மீட்டெடுத்துக் கொள்வதற்கான வசதியினையும் கொண்டுள்ளது.


இது தவிர பதியப்பட்ட ஒரு தகவலை இன்னுமொருவருக்கு மினஞ்சல் செய்ய முடிவதுடன் அதற்கான தளத்தில் ஒரு கணக்கினை உருவாக்கி அதில் நாம் பதிந்து வைத்திருக்கும் தகவல்களை குறிப்பிட்ட மென்பொருளின் ஊடாகவே தரவேற்றம் செய்திடலாம் (Syc).

 இதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் குறிப்பிட்ட தளத்துக்கு சென்று எமது Username, Password ஐ உள்ளிடுவதன் மூலம் நாம் பதிந்த அத்தனை தகவல்களையும் பார்த்துக்கொள்ளலாம்.

இது தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளை தரும் இந்த மென்பொருளை Android மற்றும் iOS சாதனங்களில் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதனை நீங்களும் உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்துக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


br />
 மேலும் இதனையும் பார்க்க: Android சாதனத்துக்கு பெறுமதி சேர்க்கும் அழகிய Alarm Clock Application தற்பொழுது முற்றிலும் இலவசமாக.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top