எமது கணனி வைரஸ் கோப்புக்களால் பாதிக்கப்படுவதும் அதனை நீக்க நாம் எடுக்கும் முயற்சியும் வழமையாகி விட்டது. ஒரு சந்தர்பத்தில் கணனி வைரஸ் என்றாலே நடுங்கி நின்ற இந்த உலகம் இன்று அவற்றிற்கு எதிராக செயற்படும் மென்பொருள்களின் வருகையால் ஆறுதல் பெற்றிருக்கின்றது என்றே கூறவேண்டும்.

எமது கணனியானது வைரஸ் நிரல்களால் பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் எரிச்சலூட்டக் கூடியதாகவும் பாரதூரமானதாகவும் அமையும் சந்தர்பங்கள் உண்டு.
எனவே இவ்வாறு விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் வைரஸ் நிரல்களை நீக்குவதற்கு நாம் எமது கணனியில் சிறந்த ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நிறுவி இருப்பது அவசியம் என்பதுடன் அவற்றினை தொடர்ந்து புதுப்பித்தும் வரவேண்டும்.

எனவே இன்று ஏராளமான மென்பொருள்கள் இதற்கென இலவசமாகவும், கட்டணம் செலுத்துவதன் மூலமும் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடிந்தாலும் அவற்றுள் கட்டணம் செலுத்தி பெறப்படுபவைகளில் சற்று வசதிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

பொதுவாக நாம் இலவசமாக வழங்கப்படும் மென்பொருள்களையே தரவிறக்கி பயன்படுத்துவதுண்டு. 

இருந்தாலும் உலகின் மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களில் ஒன்றான Norton Anti-Virus Guard ஆனது 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது.


Norton Antivirus


உலகளாவிய ரீதியில் 175 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்வசம் வைத்திருக்கும் இந்த மென்பொருளானது அதன் பயனர்களின் இணைய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை இது வழங்குவதுடன் சமூக வலை தளங்களினூடாகவும், வைரஸ் நிரல்கள் இணைக்கப்பட்ட கோப்புக்கள் கணனிக்கு தரவிரக்கப் படுவதிலிருந்தும் இது பயனர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கின்றது.சாதாரணமாக இதனை சோதனை பதிப்பாக வெறும் 30 நாட்களுக்கே பயன்படுத்த முடியும் அல்லது $50 கட்டணத்தை செலுத்தியே இதன் முழுப்பதிப்பை பெறவேண்டும்.

இருந்தாலும் இதனை பின்வரும் இணைப்பு மூலம் 6 மாதங்களுக்கு இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றது Norton நிறுவனம்.


இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


இதனை நிறுவ உங்கள் கணனி கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகமைகள். (Minimum Hardware Requirements)


  • 300 MHz for Microsoft Windows XP, 1 GHz for Microsoft Windows Vista/Microsoft Windows 7/Windows 81
  • 256 MB of RAM
  • 300 MB of available hard disk spaceLove to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top