விண்டோஸ் கணினிகளுக்கான மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுள் Bitdefender Internet Security மென்பொருளும் ஒன்றாகும்.


bitdefender-internet-security-2014-with-geniune-key


இது உங்கள் கணனிக்கு தீங்கு விளைவிக்கும் நிரல்களிலிருந்து கணினிக்கு பூரண பாதுகாப்பை வழங்கிட உதவுவதுடன். உங்கள் இணையம் மூலமான கொடுக்கல் வாங்கல்கள் வங்கி நடவடிக்கைகள் போன்றவற்றினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவுகின்றது.


மேலும் இது வினைத்திறனான Firewall வசதியை கொண்டிருப்பதால் உங்களின் பாதுகாப்பான இணைய உலாவலுக்கு உதவுவதுடன் அனுமதிக்கப்படாத முறையில் ஏனையவர்கள் உங்களை வலையமைப்பின் ஊடாக அணுகுவதை விட்டும் பாதுகாப்பு அளிக்கின்றது.

இது தவிர Bitdefender Safego எனும் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக வலைதளங்கள் ஊடாக பரவும் தீய நிரல்களை துல்லியமாக இது இனங்கண்டு அவற்றிலிருந்து உங்களை பாதுகாப்பதுடன் கூகுள், Bing தேடல் இயந்திரங்கள் ஊடாக பெறப்படும் முடிவுகளில் உள்ள விரும்பத்தகாத தளங்களை வேறு படுத்தி காட்டுகின்றது.

அத்துடன் Vulnerability Scanner என்பதன் மூலம்  உங்கள் கணினியில் பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் பாதுகாப்பற்ற முறையில் உங்கள் கணனியின் அமைப்புக்கள் காணப்படும் போது அதனையும் இனங்கண்டு அறிவுறுத்தும் வசதியை கொண்டுள்ளது.

Free Bitdefender Internet Security 2016 மென்பொருள்

இவைகள் தவிர இன்னும் ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மென்பொருளை இலவசமாக 6 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான Licence Key ஐ பின்வரும் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேலே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் நீங்கள் செல்லும் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்ட பின் i'am not a robot என்பதில் Tick செய்து GET YOUR ACTIVATION CODE என்பதை சுட்டுவதன் ஊடாக குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கி இலவசமாக 6 மாதங்களுக்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


இதனை நிறுவ உங்கள் கணினி கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகமைகள். (Minimum Hardware Requirements)

  • Operating system: Microsoft Windows XP SP3 (32 bit) , Vista (SP2), Microsoft Windows 7 (SP1), Microsoft Windows 8
  • CPU: 800MHz 
  • processorMemory (RAM): 1 GB


தமிழில் தகவல் தொழில்நுட்பத்தின் தனித்துவமான தளம் Tamilinfotech உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top