Windows XP இல் Video கோப்புக்களை Edit செய்து கொள்வதற்காக தரப்பட்ட Windows Movie Maker எனும் மென்பொருளானது Windows இன் அடுத்து வந்த பதிப்புக்களில் தரப்படாமையானது Windows பயனர்களுக்கு சற்று ஏமாற்றத்தைதான் அளித்திருந்தது என்றே கூற வேண்டும்.

Video கோப்புக்களை Edit செய்துகொள்வதற்காக Windows கணனியிலேயே தரப்பட்ட Windows Movie Maker ஆனது எமது Video கோப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல அருமையான வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்ததனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.


இருந்தாலும் Windows XP முடிவுக்கு வந்துள்ள இந்த சந்தர்பத்தில் அதிகமானோர் Windows XP ஐ விட்டு விலகி Windows 7 மற்றும் Windows 8/8.1 போன்ற பதிப்புக்களுக்கு நகரத் தொடங்கி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.


எனவே நீங்களும் Windows இன் புதிய பதிப்புகளுக்கு நகர்ந்து விட்டு Windows Movie Maker இல்லையே என்று எங்குகின்றீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு கைகொடுக்கின்றது VSDC Free Video Editor எனும் இலவச மென்பொருள்.



இந்த மென்பொருளும் Windows Movie Maker போன்றே எளிமையான இடைமுகத்தை கொண்டிருப்பதுடன் அதற்கு ஈடான அத்தனை வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


பல்வேறு புகைப்படங்களை ஒன்றிணைத்து அதற்கு உங்கள் இரசனைக்கு ஏற்றவாறு விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடிவதுடன் அதற்கு பின்னணி இசை ஒன்றினை வழங்கவும் முடியும்.

மேலும் நீளமான வீடியோ கோப்பு ஒன்றில் இருக்கும் உங்களுக்குத் தேவையான ஒரு பகுதியை மட்டும் வேறுபிரித்துக் கொள்ள முடிவதுடன் வீடியோ கோப்பின் முழுவதற்குமோ அல்லது ஒரு சிறு பகுதிக்கோ Watermark இட்டுக் கொள்ளவும் முடிகின்றது.


இது தவிர Video இல் இருக்கும் ஒரு காட்சியை Screen Shot எடுத்துக் கொள்ள முடிவதுடன் Screen Record செய்து கொள்ளவும் Web Cam ஐ பயன்படுத்தி Video Recording செய்து கொள்ளவும் முடியும்.



இது போன்ற இன்னும் பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download VSDC Free Video Editor



பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top