நீங்கள் புதியதொரு Smart Phone ஐ கொள்வனவு செய்ய எண்ணுகின்றீர்களா? நாம் குறிப்பிட்ட ஒரு Smart Phone ஐ கொள்வனவு செய்வதற்கு பலவும் காரணமாக இருக்கலாம்.

இருந்தாலும் அவற்றுள் சிறந்த தொளிவுத்திரன் கொண்ட Camera ஐ தன்னகமாக கொண்டுள்ள Smart Phone ஐ நீங்கள் கொள்வனவு செய்ய எண்ணினால் உங்களுக்கு உதவுகின்றது gsmarena எனும் தளம். இந்த தளத்தில் எந்த ஒரு Mobile சாதனம் தொடர்பிலும் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.


என்றாலும் இந்த தளத்தில் Smart Phone களின் தெளிவுத்திறனை ஒப்பிட்டு சிறந்த தொளிவுத்திரன் கொண்ட Smart சாதனம் எது என்பதை அறிந்து கொள்ளவும் இதே தளத்தில் வசதி உள்ளது என்பதனை நம்மில் அதிகமானோர் அறிந்ததில்லை.

பின்வரும் இணைப்பில் செல்வதன் மூலம் நீங்கள் Camera இன் தெளிவுத்திறனை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும் மூன்று Smart சாதனங்களின் படங்களையும் ஒரே பார்வையில் பார்க்க முடியும்.
ஏற்கனவே பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி 100% உருப்பெருக்கம் செய்யப்படும் போது அதன் தெளிவுத்திறன் சாதனத்துக்கு சாதனம் எவ்வாறு வேறு படும் என்பதனை மிகவும் துல்லியமாக ஒப்பு நோக்க முடிகின்றது.
மேலும் குறிப்பிட்ட ஒரு Smart சாதனத்தின் மூலம் பிடிக்கப்படும் Video இன் தரம் எவ்வாறு அமையும் என்பதனை குறிப்பிட்ட தளத்தின் Video Quality Comparison எனும் பக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கு கீழுள்ள இணைப்பில் செல்க.


இது தவிர குறிப்பிட்ட இரு வேறு Mobile சாதனங்கள் பற்றி ஒரே நேரத்தில் ஒப்பிட்டு தகவலை பெற குறிப்பிட்ட தளத்தின் Compare எனும் பக்கம் உதவுகின்றது. இதற்கு கீழுள்ள இணைப்பில் செல்க.


நீங்கள் புதியதொரு Smart சாதனத்தை கொள்வனவு செய்ய எண்னும் போது நிச்சயம் Gsmarena தளம் வழங்கும் இந்த வசதிகள் உதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.மேலும் பல சுவையான தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது முகநூல் பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top