தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன இதற்கு சான்று பகரும் வகையில் நாம் ஏற்கனவே Google செய்யும் அட்டகாசங்கள் மற்றும் கணனித் திரையில் பூச்சிகளை ஓடவிடுதல் போன்ற பல சுவாரஷ்யமான விடயங்களை பார்த்திருந்தோம்.

அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம்.

உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா? 

அப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


 • பின்வரும் வரிகளை  Copy செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க. 
 • Dim speaks, speech
  speaks="Welcome to your PC, Tamilinfotech"
  Set speech=CreateObject("sapi.spvoice")
  speech.Speak speaks 
இதனை Copy செய்ய இங்கே சுட்டுக. 
 • பின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் Tamilinfotech எனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.


 • VBS கோப்பாக சேமித்துக்கொள்ள Notepad இல் Save As என்பதனை சுட்டி தோன்றும் சாளரத்தில் Save as type என்பதில் All Files என்பதனையும் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன்  .vbs எனவும் தச்சு செய்து (Ex: Welcome.vbs) கணனியில் சேமித்துக்கொள்க.  • பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
 • நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
 • இனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க  • அவ்வளவு தான்!

இனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.

தொடர்ந்தும் எமது  facebook, Google Plus, Twitter போன்ற சமூக வலைதளங்கள் ஊடாக இணைந்திருங்கள் இன்னும் பல சுவாரஷ்யமான தொழில்நுட்ப தகவல்களுடன் நாங்கள் உங்களை வந்தடைவோம்.

எமது பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே அலுத்துக.

நன்றி.

Love to hear what you think!

4 comments:

 1. when i typed shell:startup and click enter it shows the following error.
  "windows cannot find 'shell:startup'. Make sure you typed the name correctly, and then try again "

  பதிலளிநீக்கு
 2. easy get more traffic your blog within 5 days http://www.lankanmirrorlk.com/2014/02/how-to-increase-your-blogger-traffic.html

  பதிலளிநீக்கு
 3. Its really superb for single pc user............... keep it up and thank you for sharing /////

  பதிலளிநீக்கு

 
Top