Microsoft நிறுவனம் SkyDrive எனும் பெயரில் வழங்கி வந்த இணைய சேமிப்பாக வசதியின் பெயரை OneDrive என அண்மையில் மாற்றம் செய்திருந்ததனை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தோம்.

ஆரம்பத்தில் Invite நிலையில் இருந்த தளத்தினை தற்பொழுது Microsoft நிறுவனம் உத்தியோக பூர்வமாக பயன்பாட்டுக்கு விட்டுள்ளது.


இதில் கணக்குகளை உருவாக்கும் முதல் 100,000 பயனர்களுக்கு இலவசமாக 100 GBசேமிப்பதற்கான இடம் வழங்கப்பட்டது. இருப்பினும் இது ஒரு சில மணித்தியாலங்களில் 100,000 கணக்குகளை தாண்டியிருக்கும் என எண்ணுகிறேன்.

இதில் ஏனைய இணைய சேமிப்பகங்களை விடவும் சற்று விரும்பத்தக்க மேலதிக வசதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 




Microsoft Word, Excel Workbook, Powerpoint Presentation என அத்தனை உங்கள் ஆவணங்களையும் இணையத்தினூடாகவே தயாரித்துக் கொள்ள முடியும். என்பதுடன் முகநூலுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நீங்கள் Ondrive இல் இருந்தவாறே உங்கள் நண்பர்களுடன் உரையாடவும் (Chat) முடியும்.

இன்னும் பல வசதிகளை வழங்கும் OneDrive இல் நீங்களும் கணக்கொன்றினை உருவாக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


ஆரம்பத்தில் உங்களுக்கு 7GB இலவச இடம் வழங்கப்படும். பின் இதனை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்னும் 5GB இடத்தினை பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் தராப்படுகின்றது.



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top