SwiftSearch எனும் மென்பொருளானது உங்கள் கணனியில் இருக்கக் கூடிய எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக தேடிப்பெற உதவுகிறது.


ஒரு கோப்பை தேடுவதற்காக விண்டோஸ் கணனியில் தரப்பட்டுள்ள வசதியை விட பன்மடங்கு வேகமாக எந்த ஒரு கோப்பையும் தேடித்தரும் இந்த மென்பொருளானது அளவில் மிகச்சிறியது என்பதுடன் இதனை பயன்படுத்துவதற்காக கணனியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை.


நீங்கள் தேடுவதற்காக இடும் சொல்லிற்குரிய அத்துனை கோப்புக்களையும் உங்கள் கணனியிலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் பட்டியல் படுத்துவதுடன் அவைகள் கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் இடம், குறிப்பிட்ட கோப்பின் அளவு, அவை கணனியில் பதியப்பட்ட நாள் நேரம் என அத்தனையையும் வேறு பிரித்து காட்டுகிறது.

SwiftSearch

மேலும் நீங்கள் தேடிப்பெற விரும்பும் கோப்பினது வடிவத்தை அடிப்படையாகக் கொண்டும் உங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். 

உதாரணமாக உங்கள் கணனியில் இருக்கும் அத்தனை Mp3 கோப்புக்களையும் தேடிப்பெற வேண்டுமாயின் *.mp3 என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் அனைத்து Mp3 கோப்புக்களையும் தேடிப்பெற முடியும்.

Portable பதிப்பாக பயன்படுத்த முடியுமான இந்த மென்பொருள் கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினரும் மிக இலகுவில் பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது. 



1 Mb இற்கும் குறைவான அளவினையே உடைய இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Love to hear what you think!

1 comments:

 
Top