நாம் கணனியில் இணையத்தினை பயன்படுத்த இணைய உலாவி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். 

 

அந்த வகையில் இன்று அதிகமான கணனிப் பயனர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகள் என்றால் அது Google Chrome மற்றும் Mozilla Firefox என்பனவே ஆகும்.

 

அநேகமான கணனிப் பயனர்களால் இவை இரண்டும் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு காரணம் இவ்விரண்டும் வேகமான இணைய உலாவலுக்கு உதவுவது மட்டுமின்றி இன்னும் ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டிருப்பதுமாகும்.

இதற்கமைய இவ்விரு இணைய உலாவிகளையும் பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு தளத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி எமது முன்னைய பதிவில் பார்த்திருந்தோம். இதனை மேலும் இலகு படுத்தும் வகையில் Google Chrome இணைய உலாவியில் Profile Manager எனும் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

 இதனை நீங்கள் செயற்படுத்திக் கொள்வதன் மூலம் வெவ்வேறான Profile களை Title Bar இல் உருவாக்கப்படும் எளிமையான இடைமுகத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Google Chrome Profile

இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதே இந்த பதிவு.

  • நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் chrome://flags/ என்பதனை Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக. 


Google Chrome உலாவி

(இங்கு Enable new profile management system Windows என்பதனை தேடிப்பெற வேண்டும் இதில் அதிகமான அம்சங்கள் பட்டியல் படுத்தப்பட்டிருப்பதால் இதனை Scroll செய்வதன் மூலம் தேடிப்பெறுவது சிரமமான காரியம் எனவே Search மூலம் இதனை பெற கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.) 

  • chrome://flags/ என்பதனை Address Bar இல் தட்டச்சு செய்து பெறப்படும் சாளரத்தில் Ctrl+F இனை அலுத்துக.
  • இனி Search செய்வதற்கான ஒரு Bar உருவாகும். அதில் #enable-new-profile-management என்பதனை தட்டச்சு செய்க 
  • அது Enable new profile management system Windows எனும் Settings இற்கு கொண்டு செல்லும்.
  • பிறகு குறிப்பிட்ட Settings இற்குக் கீழ் இருக்கும் Enable என்பதனை சுட்டுக.
  • இனி Relaunch Now எனும் Button தோன்றும் அதனை அழுத்துக பிறகு Google Chrome இணைய உலாவி மீண்டும் துவங்கும்.

அவ்வளவுதான்.

இனி Title Bar இன் வலது மூலையில் Profile Manager இனை மிக இலகுவில் பயன்படுத்துவதாற்கான வசதி தோன்றி இருப்பதனை அவதானிப்பீர்கள்.
Love to hear what you think!

2 comments:

 
Top