ஆரம்ப காலங்களில் போலல்லாது இன்று இணையமானது ஆங்கிலத்தில் மட்டுமின்றி உலகில் இருக்கும் அத்தனை பிரதானமான மொழிகளிலும் வலம்வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நமக்குத் தேவையான ஒரு தகவல் தெரியாத ஒரு மொழியில் இருந்தால் அல்லது குறிப்பிட்ட தகவல் பிறிதொரு மொழியில் இருப்பதானால் அதன் சில சொற்களுக்கு பொருளறிய முடியாவிட்டால் நாம் நாடுவது Google தரும் Google Translate எனும் சேவையையே ஆகும்.

இதற்கு நாம் புதிதாக ஒரு Tab ஐ திறந்து அதில் Google Translate சேவைக்கு சென்று பொருளறிய வேண்டிய சொற்களை Copy Past செய்ய வேண்டியிருக்கும் இருப்பினும் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பொருளறிய வேண்டிய எந்த ஒரு சொல்லையும் Right Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தமிழில் பொருலரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் Firefox  இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின் பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.
கீழுள்ள இணைப்பை சுட்டி Google Translate பக்கத்துக்கு செல்லுக.

====> இங்கு சுட்டுக

firefox Add Google Translate


பின் குறிப்பிட்ட பக்கத்தில் இருந்தவாறு FireFox இன் வலது மேல் மூலையில்  Search செய்வதற்காக தரப்பட்டிருக்கும் Bar இல் கீழ் நோக்கிய அம்புக்குறி அடையாளத்தை சுட்டி Add "Google Translate" என்பதை அலுத்துக.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் பொருளறிய வேண்டிய எந்த ஒரு சொல்லையும் தெரிவு செய்த பின் Right Click செய்து Search Google Translate for "Text" என்பதை அழுத்தினால்  Google Translate மூலம் தமிழில் பொருள் கிடைக்கும்.


நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் முறையை பின்பற்றுக.


கீழுள்ள இணைப்பில் சென்று தரப்பட்டுள்ள இணைப்பை  Copy செய்து Google Chrome இணைய உலாவியின் Address Bar இல் Past செய்வதன் மூலம் Google Translate பக்கத்துக்கு செல்க.

இணைப்பை பெற ====> இங்கு சுட்டுக

desktop Google Translate


பின் Google Chrome இணைய உலாவியின் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள Customize Button ஐ சுட்டி Settings இற்கு செல்க

Chrome Customize Button


இனி Settings பகுதியில் Search என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Manage search engines என்பதனை அலுத்துக

 பிறகு திறக்கும் சாளரத்தில் Google Translate தானாக இணைக்கப்பட்டிருப்பதை அவதானிப்பீர்கள்.

உபாயம்


ஒரு வேலை அது தானாகவே Default Search engine (Bold Text) ஆக மாறியிருக்கும் அவ்வாறு மாறி இருக்காவிட்டால் குறிப்பிட்ட Search Engine மீது சுட்டியை வைக்கையில் Make Default என்ற Button தோன்றும் பின் அதனை சுட்டுவதன் மூலம் Default Search engine ஆக மாற்றிவிடுங்கள்.

அவ்வளவுதான்.இனி நீங்கள் பொருளறிய வேண்டிய எந்த ஒரு சொல்லையும் Right Click செய்து Search Google Translate for "Text" என்பதை அழுத்தினால்  Google Translate மூலம் தமிழில் பொருள் கிடைக்கும்.


நன்றி.


Love to hear what you think!

8 comments:

 1. மிகவும் நன்றி நண்பரே !
  இதே போல் internet explorer உலவியில் செய்ய முடியாதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சி வெற்றியளித்தால் தெரிவிக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. விளக்கம் தெளிவில்லையோ என்ற அச்சத்தில் இருந்தேன். இருப்பினும் உங்கள் கருத்து எனக்கு ஆறுதலை தந்தது.

   தொடர்ந்தும் இணைந்திருக்கும் உங்களுக்கு நன்றி (y)

   நீக்கு
 3. நன்றி நல்ல தகவல் தந்துஉள்ளீர்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்

   நீக்கு
 4. மிக்க நன்றி அண்ணா அருமையான தகவல்

  எனது வலைதளம் www.itjayaprakash.blogspot.in

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொன்ன படி செய்தேன் .. ஆனால் google gherom என்னால் பயன் படுத்த தெரில .. உதவ முடியமா?

  பதிலளிநீக்கு

 
Top