அண்மையில் vBulletin-Softonic வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

இவைகள் பிரதானமாக பின்வரும் அம்சங்களை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த Anti-Virus Guard மென்பொருள் எது என தீர்மானிக்கப்பட்டது.

 • தீங்கு விளைவிக்கும் நச்சு நிரல்களை கண்டறியும் திறன்.
 • நிறுவப்பட்டு இயங்கும் போது கணனியின் செயல்திறன்.
 • பயனர்களுக்கு ஏற்ற இடைமுகம்.
இவ்வாறு AVAST! AVIRA, PANDA CLOUD, MICROSOFT, AVG, BAIDU, QIHOO, BITDEFENDER போன்ற இலவச Anti-Virus Guard மென்பொருள்கள் உட்பட KASPERSKY, BULLGAURD, ESET, F-SECURE, G DATA மற்றும் NORTON போன்ற கட்டண மென்பொருள்களும் சோதிக்கப்பட்டது.

இதன் படி 8.69 எனும் அதிகூடிய புள்ளியை பெற்று NORTON Anti-Virus Guard முதலிடத்திலும் 8.47 புள்ளிகளை பெற்ற ESET Anti-Virus Guard இரண்டாவதாகவும் 8.39 புள்ளிகளை பெற்ற Kaspersky Anti-Virus Guard மூன்றாவது இடத்துக்கும் தெரிவு செய்யப்பட்டது.


மேலும் 8.30 புள்ளிகளுடன் AVG Free Anti-Virus Guard நான்காவது இடத்திலும் உள்ளது.அத்துடன் விசேட திறன்கள் அடிப்படையில் பின்வரும் மென்பொருள்கள் தெரிவு செய்யப் பட்டன.

 • ஆண்டுக்கான மிக வலிமையான Anti-Virus Guard மென்பொருள் - G DATA
 • ஆண்டுக்கான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதும் சிறந்த பெறுபேறுகளை தரக்கூடியதுமான (promising) Anti-Virus Guard மென்பொருள் - BAIDU
 • வேகமான Anti-Virus Guard மென்பொருள் - ESET
 • அதிக வசதிகளைக் கொண்ட இலவச Anti-Virus Guard மென்பொருள் - AVAST!
 • ஆண்டுக்கான ஏமாற்றத்தை அளித்த Anti-Virus Guard மென்பொருள் - MICROSOFT (MSE)Windows கணனியில் பயன்படுத்துவதற்கு மிகச் சிறந்த இலவச Anti-Virus Guard என நீங்கள் கருதுவது எதனை?


எனும் வினாவை எமது முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தோம் அதற்காக உங்கள் கருத்தை தெரிவித்திருந்த அனைவருக்கும் நன்றிகள். 
Love to hear what you think!

2 comments:

 1. AVAST தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்... மற்ற தகவல்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி வாசகரே ...!!!

   நீக்கு

 
Top