நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்திய Windows XP இயங்குதளம் இன்னும் ஒரு சில மாதங்களில் விடை பெற இருக்கின்றமையை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்றோம்.அந்தவகையில் கிட்டத்தட்ட இன்றிலிருந்து இன்னும் 89 நாட்களுக்குள்  முடிவுக்கு வர இருக்கும் Windows XP ஆனது உலகில் அதிகமானவர்களால் விரும்பிப் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக விளங்கியிருக்கின்றது.

பொதுவாக Microsoft இன் அனைத்து இயங்குதளங்களும் அதற்கான காலவதித் திகதியுடனே வெளிவருகின்றது இதற்கு Windows XP மட்டும் விதிவிலக்கா என்ன.


Windows XP முடிவுக்கு வருகிறது என்றால் என்ன?

Microsoft ஆனது Windows XP இயங்குதளத்துக்கு வழங்கி வந்தஆதரவினை எதிர்வரும் April 8, 2014 திகதியுடன் நிறுத்த இருக்கின்றது. அதாவது Microsoft நிறுவனம் Windows XP இற்காக வழங்கும் பாதுகாப்பு மேம்படுத்தல்கள் (security updates), பாதுகாப்பு தொடர்பற்ற ஏனைய மேம்படுத்தல்கள் (Non-security hotfixes), இலவச மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவைகள் என அனைத்தும் எதிர்வரும் April 8, 2014 திகதியுடன் நிறைவுக்கு வர இருக்கின்றது.

இருப்பினும் Avira மற்றும் Google Chrome போன்றன தமது மென்பொருட்களுக்கான Windows XP ஆதரவினை தொடர்ச்சியாக 2015 வரை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

Microsoft இட்ட முடித்திகதிக்குப் பின் Windows XP ஐ தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் என்ன நிகழும்?

Microsoft ஆனது April 8, 2014 திகதிக்கு முன் Windows XP பயனர்களுக்கு Windows இன் புதிய பதிப்பான Windows7, Windows 8/8.1 போன்ற பதிப்புக்களுக்கு மேம்படுத்திக்கொள்ள வலியுறுத்துகின்றது.

இது மீறப்படும் சந்தர்பத்தில் உங்கள் கணனி துருவிகளின் (HACKERS) தாக்குதலுக்கு உட்படலாம். இது உங்கள் இணைய கொடுக்கல் வாங்கல்கள் இணைய வங்கி நடவடிக்கைகள்  என அனைத்து இணையத்தின் ஊடான செயற்பாடுகளுக்கும் வேட்டு வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பிட்ட திகதியில் Windows XP மட்டுமா முடிவுக்கு வரும்?


Windows XP உடன் Office 2003 உம் Microsoft Exchange Server உம் முடிவுக்கு வர உள்ள அதேவேளை Windows Server 2003 ஆனது July 2015 இல் முடிவுக்கு வர உள்ளது.

இதற்கு தீர்வு தான் என்ன?


Windows XP இற்கு பின்னரான Windows இன் அடுத்த பதிப்பான Windows Vista அதிக வரவேற்பை பெறவில்லை எனினும் அதற்குப் பின்னரான Windows 7 ஆனது Windows பயனர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற ஒரு இயங்குதளமாக உள்ளது.அதே போல் இன்று அதிகம் பேசப்படும் Windows 8/8.1 போன்றவற்றுக்கும் அதிகமானவர்கள் நகரத் தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

எனவே இது வரை Windows XP பயன்படுத்துகின்றவர்கள் Windows இன்அண்மைய பதிப்புக்கலானWindows 7, Windows 8/8.1 போன்ற வற்றிற்கு மாறிக்கொள்ளலாம்.

அந்த வகையில் Windows இன் பதிப்பை Windows XP இலிருந்து புதிய பதிப்புகளுக்கு மாற்றிகொல்வதை வலியுறுத்தும் வகையில் Microsoft நிறுவனம் Countdown எனும் தளத்தை உருவாக்கியுள்ளது.

குறிப்பிட்ட தளத்தை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க 


Love to hear what you think!

3 comments:

 
Top