Timely ஆனது  Android சாதனங்களுக்கான ஒரு அருமையான Alarm Clock Application ஆகும்.

Timely Android மென்பொருள்



இது வெறுமனே Alarm Clock Application ஆக மட்டுமல்லாது Stopwatch மற்றும் Timer வசதியினையும் சேர்த்தே தருகின்றது. மேலும் Cloud Alarm வசதி மூலம் உங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Android சாதனங்களுக்கான Alarm இனை குறிப்பிட்ட எதாவது ஒரு சாதனத்தை பயன்படுத்தி அனைத்துக்கும் இட்டுக்கொள்ளவும் வழிவகுக்கின்றது.

அத்துடன் பார்ப்பதற்கு எளிமையாகவும் அழகிய தோற்றத்தையும் கொண்டுள்ள இது கேற்பதற்கு இனிமையான ஒலிகளையும் எம் இரசனைக்கு ஏற்றவாறு Theme களை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியையும் இது வழங்குகின்றது.

Android free Application


Bitspin எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டாலும் இதன் பல வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே வழங்கப்பட்டு வந்தது. உதாரணமாக இலவச பதிப்பில் குறிப்பிட்ட சில ஒலிகளை மட்டுமே பயன்படுத்த முடிந்ததுடன் ஒரு சில Theme களை மாத்திரமே பயன்படுத்த முடிந்தது.

இருப்பினும் இனிமையான விடயம் என்னவெனில் இந்த Bitspin நிறுவனத்தை Google நிறுவனம் அண்மையில் விலைக்கு வாங்கியிருந்ததுடன் இந்த மென்பொருளின் அத்துனை வரையறுக்கப்பட்ட வசதிகளையும் இலவசமாக வழங்கியுள்ளது.இதற்கு முன் இது போன்று Snapseed எனும் Photo Editing மென்பொருளை தனதாக்கி அதன் Android பயனர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நீங்களும் இந்த Timely Application ஐ உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top