கணணி என்கின்ற தகவல் தொழில்நுட்ப சாதனையும் இணையம் என்கின்ற அதன் பாய்ச்சலும் இணைந்து உலகை உள்ளங்கைக்குள் சுருக்கி அறிவையும் தகவல்களையும் அனைவருக்கும் பொதுவாக்கி வரும் அற்புதத்தை நாம் நாளாந்தம் அனுபவித்து வருகின்றோம் என்றால் மிகையாகாது.

இதன் விளைவாக இன்று நாம் எமது ஏராளமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இணையத்தையே நம்பி நிற்கின்றோம். இன்று இணைய வங்கி முறை அனைவராலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்ய உறவினர் நண்பர்களுடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள என இன்றைய தொழில்நுட்பம் பரந்து விரிந்து கிடக்கின்றமை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.


வலிமையான கடவுச்சொல்


எனவே இவற்றுக்கெல்லாம் திறவுகோலாக அமைவது நமது கடவுச்சொற்களே ஆகும்.

இந்த கடவுச்சொல்லானது ஒருவேளை இன்றைய நவீன திருடர்கள் என வர்ணிக்கப்படும் துருவிகளின் (Hackers) கையில் கிடைத்துவிட்டால் அந்தோ பரிதாபம்! நமது கதி அதோ கதிதான்.

இதனால் நாம் எமது கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக அமைத்திடுவது முக்கியத்துவம் பெறுகிறது

● பாதுகாப்பான கடவுச்சொல் என்றால் என்ன?


உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்தி கொள்ளக்கூடியதும் ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான கடவுச்சொல் பாதுகாப்பான கடவுச்சொல் எனலாம்.

● பாதுகாப்பான கடவுச்சொற்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது?


நீங்கள் உங்களுக்கென சிறியதொரு விதி ஒன்றினை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எத்தனை கடவுச்சொற்களையும் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்திடலாம்.

● என்ன அந்த விதி?


முதலில் நாம் அடிப்படை கடவுச்சொல் ஒன்றினை தெரிவு செய்து அதனுடன் குறிப்பிட்ட தளத்தின் பெயரையும் சேர்த்துக் கொள்வதாகும். உதாரணமாக Facebook தளத்துக்கு நாம் கடவுச்சொல்லை அமைக்கையில் எமது அடிப்படை கடவுச்சொல் XYZ என வைத்துக்கொண்டால் XYZFACEBOOK என அமைக்கலாம்.

இதனை இன்னும் வலுவானதாக அமைக்க அடிப்படை கடவுச்சொல்லான XYZ உடன் உங்களை கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து அதனை மாற்றிவிடலாம். உதாரணத்திற்கு XYZ12FACEBOOK என அமைத்துக் கொள்ளலாம். இதனை மேலும் வலுப்படுத்த அடிப்படை கடவுச்சொல்லுடன் நீங்கள் கடவுச்சொல்லை தெரிவு செய்யும் தளத்தின் முதல் ஆங்கில எழுத்தை Capital இலும் ஏனையவற்றை Simple Letters இலும் இடலாம். உதாரணத்திற்கு XYZ12Facebook என அமையும்.

● சரி இந்த அடிப்படை கடவுச்சொல்லை எவ்வாறு தெரிவு செய்வது?


ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள் அடிப்படை கடவுச்சொல்லாக தெரிவு செய்யலாம். உதாரணமாக Why This Kola Veri எனும் பாடல் எழுத்தின் முதல் எழுத்துக்களை கடவுச்சொல்லாக தெரிவு செய்தால் உங்கள் அடிப்படை கடவுச்சொல் WTKV என அமையும். கடவுச்சொல் நினைவிலிருக்க நீங்கள் பாட்டை பாடினாலே போதும்.

அல்லது ஏற்கனவே காணப்படும் Keyboard இன் Key களின் அமைவிடத்தின் நிலைகளை ஞாபகப்படுத்தலாம். உதாரணமாக DFGH, VBNM போன்றன.

● குறிப்பு: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களை கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.

● அவதானம்: எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு கடவுச்சொல்லை நீங்கள் பயன்படுத்துவீர்களானால் உங்கள் கடவுச்சொல்லை யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். ஒரு கடவுச்சொல்லையே எல்லாவற்றிற்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டுபண்ணி தரும். என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

SplashData இன் அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான கடவுச் சொற்களாக பின்வரும் கடவுச் சொற்கள் பட்டியல் படுத்தப் பட்டுள்ளது.


    1. 123456
    2. password
    3. 12345678
    4. qwerty
    5. 12345
    6. 123456789
    7. football
    8. 1234
    9. 1234567
    10. baseball
    11. welcome
    12. 1234567890
    13. abc123
    14. 111111
    15. 1qaz2wsx
    16. dragon
    17. master
    18. monkey
    19. letmein
    20. login
    21. princess
    22. qwertyuiop
    23. solo
    24. passw0rd
    25. starwarsநன்றி! பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top