கணனியின் வேகத்தையும் செயற்திறனையும் பேணுவதற்கான மென்பொருள்களில் CCleaner உம் சிறந்த ஒரு மென்பொருளாகும் இன்று இது பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


கணனியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை சொற்ப நேரத்தில் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய துணை புரியும் இந்த மென்பொருளின் v4.11 எனும் புதிய பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.


முன்னைய பதிப்பில் இருந்த ஏராளமான குறைபாடுகள் இதில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இன்னும் பல புதிய அம்சங்கள் இதில்  சேர்க்கப்பட்டுள்ளன.

ccleaner latest


Opera இணைய உலாவிக்கான மேம்படுத்தப்பட்ட பேணுதல் வசதியை இதன் புதிய பதிப்பு கொண்டுள்ளதுடன் கணனியில் பல இடங்களில் தேங்கி இருக்கக் கூடிய ஒரே வகையான கோப்புக்களை இனங்கண்டு நீக்குவதற்காக Duplicate detection எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் Torch இணைய உலாவிக்கான ஆதரவையும் இதன் புதிய பதிப்பு வழங்குவதுடன் இன்னும் பல மாற்றங்களுடன் வெளியாகி இருக்கும் இதன் புதிய பதிப்பை நீங்கள் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

CCleaner இன் புதிய பதிப்பை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க 

   

Download CCleaner

CCleaner மூலம் உங்கள் கணனியை பராமரிக்கும் போது நீங்கள் User Name, Password இட்டு ஏற்கனவே உள்நுழைந்த இணையதளங்களில் மீண்டும் User Name, Password இட்டு உள்நுழைய வேண்டிய சிரமம் ஏற்படும் இதற்கான தீர்வை எமது முகநூல் பக்கத்தில் வழங்கியிருந்தோம். புதிதாக இந்த மென்பொருளை பயன்படுத்துபவர்களின் நலன் கருதி அதனை கீழே இணைக்கிறோம்.மேலும் இதனையும் பார்க்க: கணனியை கடு கதி வேகத்தில் பேண உதவும் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இலவச மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top