அன்றாடம் நாம் கணனியில் எத்தனையோ சொற்களை Copy Past செய்கின்றோம் அல்லவா? இருந்தாலும் ஒரு சொல்லை Copy Past செய்து விட்டு இன்னுமொரு சொல்லை Copy செய்யும் போது முன்னர் நாம் Copy செய்ததை மீட்டிப் பார்க்கும் வசதி Windows இல் தரப்படவில்லை.

எனவே இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் ஏராளமானவைகள் வரையறுக்கப்பட்ட வசதிகளை மாத்திரமே வழங்குவதுடன் இலவசமாக வழங்கப்படும் சில மென்பொருள்கள் நம்பகத்தன்மை அற்றதாகவே காணப்படுகின்றன.

இருப்பினும் Ditto எனும் மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த முடிவதுடன் நம்பகத்தமை உடையதும் பூரண வசதிகளை வழங்கக் கூடியதுமாகும்.

 

Clipboard copy past


இதனை நீங்கள் தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணனியில் என்ன என்னவெல்லாம் Copy past செய்தீர்களோ அவைகள் அத்தனையையும் Ditto தரும் எளிமையான இடைமுகத்தின் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் இந்த மென்பொருள் மூலம் பின்வரும் வசதிகளை கொண்டுள்ளது.

 

  • எளிமையான இடைமுகம்.
  • நீங்கள் ஏற்கனவே  Copy Past செய்த சொற்களினை Search செய்து பெரும் வசதி.
  • வலையமைப்பிலுள்ள ஏனைய கணனிகளுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
  • ஏனைய கணனிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது பாதுகாப்பான முறையில் (encrypted) அமைந்த தரவுப் பரிமாற்றம்.
  • Task Bar இல் இருக்கும் Ditto tray icon மூலமாகவே Copy Past செய்தவைகளை பார்க்கும் வசதி. 
  • Drag and drop மூலம் மீண்டும் தேவையான இடத்தில் Past செய்து கொள்ளும் வசதி.
  • எந்த ஒரு மொழிக்கும் ஆதரவளிக்கக் கூடியது.
  • எந்த ஒரு குறியீட்டினையும் சேமிக்கக் கூடிய வசதி.

இன்னும் பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மென்பொருள் விண்டோஸ் கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.இதனை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள் இணைப்பில் செல்க 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top