நாம் கணனியை பயன்படுத்துகையில் ஏராளமான புகைப்படங்கள், ஆவணங்கள், கோப்புக்கள், மென்பொருள்கள் என தேவையற்ற அனைத்தையும் வன்தட்டில் இருந்து நீக்கிவிடுகின்றோம் அல்லவா? 

இவ்வாறு நாம் நீக்கக் கூடிய அனைத்தும் Recycle Bin  இற்கு செல்வது நாம் அனைவரும் அறிந்த விடயமே எனவே ஒரு வேலை நாம் நீக்கிய ஏதாவது ஒன்று மீண்டும் தேவைப்பட்டால் Recycle Bin இலிருந்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் நாம் Recycle Bin இல் இருப்பவைகளையும் நீக்கியிருந்தால் என்ன செய்வது? இதற்குத் தான் பயன்படுகின்றது Recovery மென்பொருள்கள். அந்தவகையில் இதற்கென இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் இவைகளை கட்டணம் செலுத்துவதன் மூலமேபயன்படுத்த முடிகின்றது. என்றாலும் நமக்கு CCleaner ஐ வழங்கும் அதே Piriform தளமானது Recuva எனும் மென்பொருளையும் இலவசமாகவே தருகின்றது.


free Recuva

நாம் எமது கணனி வன்தட்டிலிருந்து இழந்த எந்த ஒன்றினையும் மிக வேகமாக மீட்டிக்கொள்ள இந்த Recuva எனும் மென்பொருள் வழிவகுக்கின்றது.


மேலும் இதனை எந்த ஒரு கணனியிலும் நிறுவிப் பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் மிகவும் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இதனை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.


இதனை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.


இன்னும் பல தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது சமூகவளைதங்களுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top