இன்று ஏராளமானோர் Windows இன் முன்னைய பதிப்புகளை விட்டு விலகி அதன் புதிய பதிப்புகளுக்கு நகரத் தொடங்கியுள்ளமை தொழில்நுட்பத்தின் உச்சப் பயனை பெற அனைவரும் தயாராகி விட்டனரோ!!! என்று நினைக்கத் தோன்றுகிறது.


Windows 8 slide to shutdown


அந்தவகையில் Microsoft இன் நாமத்தை மலையேறச் செய்த Windows Xp தொடக்கம் இன்றைய தொழில்நுட்ப உலகில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் Windows 8/8.1 வரை Microsoft பல்வேறு புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது.Windows இன் அண்மைய பதிப்பான Windows 8/8.1 ஆனது ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளமை நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயமே.

இருப்பினும் இதனுள் சில மறைந்து கிடக்கும் வசதிகளும் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் Slide to shutdown எனும் வசதியும் இதனுள் ஒன்றாகும் Windows 8/8.1 பயன்படுத்தும் ஏராளமான பயனர்கள் இந்த வசதியை அறிந்திருக்க வாய்ப்பில்லை இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என பாப்போம்.

நீங்கள் உங்கள் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் C Drive இனுள் சென்று Windows ====> System32 எனும் Folder இற்கு செல்க

பின் அந்த Folder இனுள் SlideToShutDown.exe என்பதனை தேடிப் பெற்று அதன் மேல் Right Click செய்து Send To ===> Desktop (Create Shortcut) என்பதனை சுட்டுக.

send to menu


பின் Desktop உருவாக்கப்படும் அந்த Shortcut இற்கு Shutdown என Rename செய்து Properties ஊடாக அதற்கு தகுந்த ஒரு Icon ஐ இட்டுக்கொள்க.

இனி அதனை Task Bar இல் Drag And Drop செய்வதன் மூலம் Pin செய்து கொள்க.


pin a program to taskbar


அவ்வளவுதான் இனி அதனை சுட்டுவதன் மூலம் நிச்சயம் புதியதொரு அனுபவத்தை பெறுவீர்கள்.


மேலதிக வசதி: இதனை ஒரு Metro App ஆகவும் பயன்படுத்தலாம்.


இதனை ஒரு Metro App ஆக சேமிக்க விரும்பினால் Run இல் %USERPROFILE%\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\ என தட்டச்சு செய்து பெறப்படும் கோப்புறையில் (Folder) Shutdown என Rename செய்யப்பட்ட Shortcut இனை இடுக.

விண்டோஸ் எக்ஸ்ப்லோறேர்


பின் Windows 8/8.1 Search பகுதிக்கு சென்று Shutdown என தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட Shutdown Shortcut இனை பெறுக.

பின் பெறப்பப்படும் Shortcut இன் மேல் Right Click செய்து Pin to Start என்பதனை சுட்டுக இனி குறிப்பிட்ட Shortcut  Metro Apps ஆக தோன்றும்.

விண்டோஸ் 8


உங்கள் வருகைக்கு நன்றி !

Love to hear what you think!

3 comments:

 1. 2013 ...எனக்கும் என்னைப்போன்ற ஆர்வலர்களுக்கும் "தகவல் தொழில்நுட்பம்" மூலமாக கணினி, மற்றும் இணையத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசானைத்தந்துள்ளது.வாழ்க...வளமுடன்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி

   தொடர்ச்சியாக இற்றைப்படுத்தவுள்ளோம் தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்

   நீக்கு
 2. என்னுடைய லேப்டப்பின் பாஸ்வோர்து மறந்து விட்டது எப்படி அதை சரி செய்வது

  பதிலளிநீக்கு

 
Top