இன்னும் சில நாட்களில் எம்மை விட்டு விடை பெற இருக்கும் 2013 ஆம் ஆண்டானது எமது தகவல் தொழில்நுட்பம் தளத்திற்கு மிகச் சிறந்த ஒரு ஆண்டாகவே  அமைந்திருந்தது.

நாம் எதிர்பார்த்திராத அளவு வரவேற்புடன் ஒவ்வொரு பதிவுகளும் ஆயிரக்கணக்கில் பக்கப் பார்வைகளை பெற்றிருந்தது.

Best of 2013

அந்தவகையில் பின்வரும் பதிவுகள் 2013 ஆம் ஆண்டில் ஏராளமான வாசகர்களின் வரவேற்பினையும் பக்கப்பார்வைகளையும் கொண்டிருந்தது.


1. கணனியில் எந்த ஒரு இடத்திலும் தமிழ் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளில் தடச்சு செய்ய Google தரும் சேவை பற்றிய பதிவாகும் இது அனேக வாசகர்களின் வரேவேற்பை பெற்றது.

=====> தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google இன் புதிய வசதி.2. இது பிழையான கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் கணனியை தவறாக பயன்படுத்த முயற்சிப்பவரை படம் பிடித்து காட்டும் எளிமையான மென்பொருள் பற்றிய பதிவாகும்.

=====> தவறான Password ஐ உள்ளிட்டு கணணியை இயக்க முயற்சிப்பவரை படம்பிடித்து காட்டும் மென்பொருள்.3. முகநூல் பயன்படுத்தாதவர்கள் யார்தான் இருக்க முடியும் என்கின்ற அளவுக்கு முகநூல் வியாபித்துவிட்ட இந்த சந்தர்பத்தில் அது தொடர்பான உபாயங்களை கொண்ட பதிவே இதுவாகும்.=====> Facebook தந்திரோபாயங்கள் (ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது)4. இது Firefox இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Smart Phone அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன் இடப்பட்ட பதிவாகும். இதில் ஒரு Firefox இயங்குதளத்தை Firefox இணைய உலாவியின் உதவியுடன் எவ்வாறு நிறுவி பயன்படுத்திப் பார்க்கலாம் என விளக்கியிருந்தோம்.

=====> Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.5. பல வித்தியாசமான இனிமையான இணையதளங்களை இந்த பதிவில் பதிவிட்டிருந்தோம்.

=====> தொல்லைகள் மறந்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுக்க உதவும் அழகிய இணைய தளங்கள்.


6. உங்கள் Android சாதனத்தின் Battery இன் சக்தி மிக விரைவில் தீர்ந்து விடுகின்றதா? அதனை நிவர்த்தி செய்ய  Google Play Store இல் கிடைக்கும் மிகச்சிறந்த Application பற்றிய பதிவே இதுவாகும்.=====> உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான மென்பொருள்.7. Viber ஆனது Smart Pnone களுக்கு மத்தியில் அழைப்புக்களை மேற்கொள்ளவும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் மிகச்சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. அண்மையில் அது கணணி மூலமும் இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள மென்பொருளை அறிமுகப்படுத்தியிருந்தது அந்த சந்தர்பத்தில் நாம் பதிவிட்ட பதிவே இதுவாகும்.=====> இலவச அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் Viber மென்பொருளை இனி கணணியிலும் பயன்படுத்த முடியும்.8. இலங்கையின் முதன்மை தொலைபேசி வலையமைப்பை கொண்டிருக்கும் Dialog நிறுவனமும் இணைய ஜாம்பவான் Google இணைந்து இலங்கையின் இணையப் பாவனையாலர்களுக்கு வழங்கிய இலவச இணையம் தொடர்பான பதிவே இதுவாகும்.


=====> Google இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog9. Google இணைய தேடு இயந்திரத்தில் பல வேடிக்கையான முடிவுகளை பெறவதற்கான வழிகாட்டலைக் கொண்ட பதிவே இதுவாகும்.

=====> Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது)10. நாம் எமக்குத் தேவையான ஆவணங்களை நாம் விரும்பிய படி தயாரித்துக்கொள்ள உதவும் MIcrosoft Word தொடர்பான உதவிக்குறிப்புக்கள், உபாயங்கள் அடங்கிய பதிவே இதுவாகும்.

=====> Microsoft Office பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உபாயங்கள்.தொடர்ச்சியான உங்கள் ஆதரவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.


Love to hear what you think!

2 comments:

 
Top