நீங்கள் பயன்படுத்துவது Windows கணனியா? அப்படியானால் இதனை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.எந்த ஒரு விண்டோஸ் கணனியும்  Logon செய்யப்பட்டிருக்கும் சந்தர்பத்தில் அதன் Password இன் துணையின்றி இன்னுமொரு Password இனை கொடுக்க முடியும்.

பொதுவாக நாம் எமக்குத் தேவையான Password இனை கொடுப்பதற்கு Control Panel ====> User Account செல்வோம். அவ்வாறு சென்று நீங்கள் மாற்றுவதானால் கட்டாயம் குறிப்பிட்ட கணனியின் Password இனை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது நாம் சொல்லும் முறை சற்று வேறுபட்டது. இதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.My Copmputer ஐ Right Click செய்து Manage என்பதனை சுட்டுக.

சுட்டி


பின் தோன்றும் சாளரத்தில் Local Users and Groups என்பதனை தெரிவு செய்க

சாளரம்


இனி Users என்பதனை Double Click செய்க

பின் குறிப்பிட்ட கணனியில் இருக்கக் கூடிய அனைத்து பயனர் கணக்குகளும் தோன்றும். 

அவற்றுள் நீங்கள் புதிய Password ஐ கொடுக்க விரும்பும் கணக்கினை தெரிவு செய்து Right Click செய்க

பின் Set Password என்பதனை சுட்ட Password ஐ மாற்றுவதற்கான ஒரு சாளரம் கிடைக்கும்.

change windows password


அதில் Proceed என்பதனை சுட்டி New Password, Confirm Password என்பதற்கு நேரே இருக்கும் கட்டத்தில் உங்கள் புதிய Password ஐ இட்டு Ok அலுத்துக.

password changing window


அவ்வளவுதான். இனி நீங்கள் இட்ட Password தான் குறிப்பிட்ட கணனியின் Password ஆகும்.மேலும் இதனையும் பார்க்க: தவறான Password ஐ உள்ளிட்டு கணணியை இயக்க முயற்சிப்பவரை படம்பிடித்து காட்டும் அருமையான மென்பொருள்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top