சாதாரண Mobile Phone களை பயன்படுத்துபவர்களில் ஏராளமானோர் அதனை விட்டு விட்டு இன்று சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் Smart Phone களுக்கு நகரத் தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதற்கு காரணம் மலிவு விலைகளில் கிடைப்பது என்பதனை விட அவற்றில் காணப்படும் கவர்சிகரமான வசதிகளே எனலாம். அதிலும் Games, Application என்றால் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.


அந்தவகையில் இன்று iOS மற்றும் Android ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டிருக்கும் Smart Phone களுக்கான கேள்வி அதீதமாக அதிகரித்திருப்பதுடன் அவற்றின் மூலம் இயக்கப்படும் Games, Application என்பவற்றுக்கான கேள்வியும் பல மடங்கு அதிகரித்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. 

எனவே Games, Application என்பவற்றுக்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்புக்களை இலவசமாகவும், கட்டணத்துடனும் வாசகர்களுக்கு வழங்குகின்றது என்றாலும் இவற்றுள் மிகவும் பிரபலமாவது மிகச்சிறந்த பண்புகளை கொண்ட தயாரிப்புக்களே.
 

Juice Cubes
Juice Cubes iOS  
விடயம் என்னவெனில் ஏற்கனவே Angry Birds எனும் நாமத்தில் Smart Phone களினூடாக அனேகரது உள்ளங்களை வென்று விட்ட Rovio Stars Ltd ஆனது Juice Cubes எனும் இன்னுமொரு புரட்சிகரமான விளையாட்டினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாம் ஏற்கனவே எமது தளத்தில் அறிமுகப்படுத்திய Candy Crush Sega இனை ஒத்து காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் 30 கட்டங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் நேற்றைய தினம் (31-10-2013) மேலும் பல புதிய கட்டங்களுடன் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது.


Juice Cubes download

தற்பொழுது இதில் 165 க்கும் மேற்பட்ட கட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மிகச்சிறந்த காட்சியமைப்பு மற்றும் ஒலி அமைப்புக்களையும் கொண்டுள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுடன் சவால் விட்டு விளையாடும் வகையில் Candy Crush இல் போன்று முகநூலுடன் தொடர்பு படுத்திக்கொள்ளவும் முடியும்.நீங்களும் இதனை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Juice Cubes for Android ==========> Download

Juice Cubes for iOS =========> Download


_______________________________________________________________
(இணையப் பக்கங்களை Zoom In/ Zoom Out செய்வதற்கு Ctrl உடன் சுட்டியின் Scroll Button ஐ சுழற்றவும்)
________________________________________________________________

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top